ஹன்சிகா அவ்ளோ அழகா... ஜெயப்ரதா !

1 minute read
முன்னாள் நடிகை, எம்பி ஜெயப்ரதாவும், அரசியலிலிருந்து விலகி நிற்கும் அமர்சிங்கும் இணைந்து தயாரித்துள்ள படம் உயிரே உயிரே. 
ஹன்சிகா அவ்ளோ அழகா... ஜெயப்ரதா !
இந்தப் படத்தில் ஜெயப்ரதாவின் மகன் சித்து நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் ஜெயப்ரதா பேசுகையில், இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமையும்.
ஹன்சிகா அவ்ளோ அழகா... ஜெயப்ரதா !
எங்களது நிறுவனத்தின் மூலம் பல்வேறு மொழிகளில் நாங்கள் படங்கள் தயாரித்துள்ளோம். ஆனாலும் என் மகனை தமிழில் தான் நாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். 

காரணம், நான் இன்று இந்த அளவு நிற்க காரணமே தமிழ் ரசிகர்கள் தான். ‘லெஜண்ட்ரி இயக்குநர் சத்யஜித்ரே' என்னிடம், நடிகைகளிலேயே நான் மிக அழகான பெண் என்று கூறுவார்.
ஹன்சிகா அவ்ளோ அழகா... ஜெயப்ரதா !
ஆனால் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாவை ‘அழகே அழகே' என வர்ணித்திருக்கிறார். இது எனக்கு சற்று பொறாமையாகத் தானிருந்தது. 

ஹன்சிகாவின் நடிப்பு இந்தப் படத்தின் மூலம் இன்னும் மெருகேறியுள்ளது என்றார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனுப் ரூபன் அறிமுகமாகிறார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர் இவர்.
ஹன்சிகா அவ்ளோ அழகா... ஜெயப்ரதா !
அங்கு 50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து விட்டார். அவர் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை மேடையில் பாடிக் காட்டினார். அது மட்டுமல்ல, ஜெயப்ரதாவுடனும் ஒரு பாடலைப் பாடினார்.
Tags:
Today | 17, April 2025
Privacy and cookie settings