கட்சி தலைவர்கள் படத்தோடு பாக்கெட் டைரி பயன்படுத்த தடை !

அரசியல் கட்சி தலைவர்களின் படத்துடன் பாக்கெட் டைரிகளை அரசு அலுவலர்கள் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ம் தேதி நடக்கிறது. 


இதையொட்டி அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர்களுக்கு பல விதிமுறைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. 

இதன்படி அரசு அலுவலர்கள், தங்கள் அலுவலகங்களில் உள்ள முதல்வர், பிரதமர் உள்ளிட்ேடாரின் படங்களை அகற்ற வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. 

மேலும் தேர்தல் ஆணையம், ஒவ்வொரு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிக்கும் தனி சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், “அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ள காலண்டர்களை உடனே அகற்ற வேண்டும். 

அத்துடன் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படம் பொறிக்கப்பட்ட பாக்கெட் டைரிகளை பயன்படுத்தக் கூடாது. இதை மீறி பயன்படுத்துவது தெரியவந்தால், விதிமீறல் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக ஒவ்வொரு அரசு துறையின் தலைவர்களும், அந்தந்த அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தகவலை எடுத்துரைத்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings