கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகினர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினருடன் ராணுவ வீரர்களும் இணைந்துள்ளனர்.
கட்டுமானப் பணிகளின் போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், கட்டுமானத் தொழிலாளர்களும், அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால், இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கியிருக்கலாம் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
இதுவரை 10 பேர் பலியானதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.