மனிதனுக்கு ஓர் அறிவு தான் அதிர்ச்சி தகவல் !

மனிதனுக்கு ஐம்புலன் அறிவு இருப்பதாக சொல்லப் பட்டது. ஆனால், மனிதனுக்கு ஓரறிவு தான் இருப்பதாக


டான் காட்ஸ் என்ற நரம்பியல் விஞ்ஞானி கண்டறிந் துள்ளார். இதனை அவர் தனது ஆய்வறி க்கையில் குறிப்பிட் டுள்ளார்.

அமெரிக்கா வின் பிராண்டெய்ஸ் பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரிய ராகப் பணியாற்றும் அவர்,

சுவை அறிவுக்கும், நுகரும் அறிவுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் மூலம், எலிகளின் சுவை யுணரும் அறிவு குறையும் போது

அதற்கேற்ற வகையில் அவை தங்களது நுகரும் அறிவை மாற்றிக் கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

Current Biology அறிவியல் இதழில் வெளியான அவரது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ள தாவது:

மூளையில் சுவை யறியும் திறன் அகற்றப் படும்போது என்ன நிகழ்கிறது என்பதைக் கண்டறியும் ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.

அதற்காக, நாவில் பட்ட உணவின் சுவையை நரம்புகள் வழியாக உணர்ந்து கொள்ளும்


எலியின் மூளைப் பகுதி நவீன கருவிகள் மூலம் செயலழிக்கச் செய்யப் பட்டது.

இவ்வாறு சுவையுணர்வு நிறுத்தப்பட்ட உடனே, நுகரும் வாசனைகளை உணர்ந்து கொள்ளும்

மூளைப் பகுதிகள் தங்களது இயக்கத்தின் தன்மையை வேகமாக மாற்றிக் கொண்டன. 

இதன் மூலம், சுவை யுணர்வும், நுகர்வுணர்வும் தனித்தனி அறிவுகள் இல்லை,

அது ஒரே அறிவின் இருவேறு அங்கங்கள் என்பது தெரிய வருகிறது.

ஏற்கெனவே ஒலியுணர்வு, தொடு உணர்வு, காண் உணர்வு ஆகியவை ஒன்றுக் கொன்று

தொடர் புடையவை என்பதை வெவ்வேறு ஆய் வாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

அதைக் கொண்டு, ஐந்து அறிவுகள் என்று கூறப்படுவது உண்மையில் ஒரே அறிவின் பிரிவுகள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மூளையின் உணர்வு இயக்கமும், கணினியின் இயக்க த்தைப் போன்றதே.

கணினி களில் எண்ணற்ற தகவல்கள் பதிவேற்றம் செய்யப் பட்டிருந்தா லும்,


நமக்குத் தேவையான விடைகளை மட்டும் தெரிந்தெடுத்து, நமக்குப் புரியும்படி எளிமைப் படுத்திக் காட்டுகிறது.

கணினி மென்பொருள் இறுதியில் என்ன காட்டுகி றதோ அது மட்டும் தான் நம் கண்களு க்குப் புலப்படு கிறது.

அதைப் போல நமது ஒரே அறிவுத் திறன் தெரிவிக்கும் சுவை, ஒலி போன்ற தகவல் களை மட்டுமே நாம் உணர்வதால்,

அது தனியான அறிவு என்ற மாயை நமக்குள் ஏற்படுகிறது, என்று அந்த ஆய்வுக் கட்டுரையில் டான் காட்ஸ் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings