ஸ்ரீதேவி மகள் அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி !

1 minute read
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க வரவுள்ளதாக நீண்ட நாட்களாகவே பேச்சு இருந்தாலும் படிப்பு முடியாமல் நடிக்க வர மாட்டார். 
நடிக்க வேண்டும் என்று மகள்களை வற்புறுத்த மாட்டேன் என ஸ்ரீதேவி கூறி வந்தார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பே ஜான்வி தமிழில் அறிமுக மாவதற்கான ஏற்பாடுகளும் நடப்பதாக சொல்லப்பட்டது. 

அதையும் ஸ்ரீதேவி மறுத்திருந்தார். சில காலம் ஓய்ந்திருந்த பேச்சு தற்போது மீண்டும் பரபரப்பாக வலம்வரத் தொடங்கி உள்ளது. நடிப்புக்கான பயிற்சியில் ஜான்வி மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று அங்குள்ள லீ ஸ்டிராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் திரைப்பட பள்ளியில் சேர்ந்து தீவிர பயிற்சி பெற்று வருகிறார்.
விரைவில் ஜான்வியை நடிகையாக திரையில் காணலாம் என பாலிவுட் இதழ்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. ஸ்ரீதேவியின் மற்றொரு மகள் குஷிக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
Tags:
Today | 11, April 2025
Privacy and cookie settings