அமெரிக்காவின் ஒரேகான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் உடற்பயிற்சி டி.வி.டி.- கள் பார்த்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வது தீங்கு விளைவிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் பிராட் கார்டினல் இது குறித்து கூறியதாவது “உடற்பயிற்சி டி.வி.டி. -களில் அதிக கவர்ச்சியாக, நம்ப முடியாத மனித படங்கள் காட்டப் படுகின்றன.
அதை பார்த்துக்கொண்டு உடற்பயிற்சி செய்பவர்கள் அந்த கற்பனையான உருவங்களை நம்பும்படி தூண்டவும், வற்புறுத்தவும் படுகிறார்கள்.
இது உடற்பயிற்சி செய்பவர்களை மனதளவில் பாதிப்பது எங்கள் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.”
உலகம் முழுவது பரவியுள்ள உடற்பயிற்சி டி.வி.டி. சந்தையானது சுமார் 250 மில்லியன் டாலர் மதிப்புக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.