சீமான் தமிழக முதல்வராக வந்து.. தமிழகத்தை ஆட்சி செய்ய போகிறாராம்!? பொது அரங்கில் இப்படி பேசுகிறார்கள் என்றால் வீட்டில் இவர்கள் எப்படி பேசுவார்கள்?
பண்பாடாக, மரியாதையாக எப்படி பேசுவது என்பதை செந்தமிழன் சீமானிடமிருந்து தான் தமிழக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணியளவில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் ‘விஜயகாந்துக்கு மவுசு- வாக்கு வங்கியா? காலச்சூழலா?’ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.
இதில் பேராசிரியர் அருணன்(மக்கள் நலக் கூட்டணி), வானதி ஸ்ரீனிவாசன் (பாஜக), சரவணன் (திமுக), சீமான்(நாம் தமிழர் கட்சி) ஆகியோர் பங்கேற்று பேசினர்.
விவாதத்தின் போது “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம்.
குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்து விட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விடுகிறேன் என்று சீமான் கூற அப்போது அருணணுக்கும் சீமானுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சீமான், ஏய், சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்காதய்யா” என அநாகரிகமான முறையில் பேசினார்.
தொலைக்காட்சி விவாதங்கள் இப்போதைக்கு லூசு என்ற வார்த்தையில் முடிந்திருக்கிறது.