பிரித்தானியாவின் லீசெஸ்டர் பகுதியில் லட்சாதிபதியாகும் அரிய வாய்ப்பை தங்களது கவனக்குறைவால் தம்பதியர் ஒருவர் தவறவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லீசெஸ்டர் பகுதியில் வசித்து வரும் டேவிட் மற்றும் எட்வினா நைலான் தம்பதியர் லொட்டோ எனப்படும் எண்கள் தெரிவு செய்யும் போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 பவுண்டுக்கான லொட்டோ டிக்கெட் ஒன்றை வாங்க முயன்றுள்ளார்.
அப்போது தமது கணக்கில் போதிய பணம் இல்லை என அந்த கைப்பேசி லொட்டோ செயலி தெரிவிக்கவும்,
அதை நிவர்த்தி செய்த பின்னர் டிக்கெட்டை வாங்கி 6 அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்து சமர்ப்பித்துள்ளார்.
இதனிடையே குலுக்கல் தினத்தன்று ஜாக்பொட் அடித்த எண்கள் வெளியான போது, நைலான் தம்பதியர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளனர்.
அவர்கள் தெரிவு செய்த எண்களுக்கே 35 மில்லியன் பவுண்ட் ஜாக்பொட் அடித்துள்ளதாக லொட்டோ செயலி உறுதி செய்திருந்தது.
இதனை யடுத்து உரிய நிறுவனத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஜாக்பொட் அடித்திருப்பதாக தெரிவித்த டேவிட் நைலானுக்கு அவர்களின் பதில் பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.
நைலான் தம்பதியர் லொட்டோ டிக்கெட் வாங்கியதற்கான எந்த பதிவும் அந்த நிறுவனத்தில் பதிவாகவில்லை என தெரிய வந்துள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் இடையே அந்த நிறுவனமும் இவர்கள் வாங்கிய டிக்கெட்டின் கணக்கை பதிவு செய்ய தவறியுள்ளனர்,
அதே போன்று நைலான் தம்பதியர் லொட்டோ செயலி வாயிலாக வாங்கிய டிக்கெட்டை உறுதி செய்யவும் தவறியுள்ளனர்.
இதனால் கைக்கு எட்டிய 35 மில்லியன் பவுண்ட்கள் தங்களது கவனக் குறைவால் சில நிமிடங்களிலேயே இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.