தே.மு.தி.க. தேர்தலில் தனித்து போட்டி... கட்சி தலைவர்கள் கருத்து !

சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்தது பற்றி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தே.மு.தி.க. தேர்தலில் தனித்து போட்டி... கட்சி தலைவர்கள் கருத்து !

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-


‘தனித்து போட்டியிடுவோம் என்று சொன்னது அவர்களின் விருப்பம். அதே சமயத்தில் ஒரு விதத்தில் வரவேற்கத் தக்கது. ஏனென்றால் அவர்கள் ஊழல் கட்சிகளின் சாயல் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக் கிறார்கள்.

பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தி ருந்தால் மகிழ்ந்து இருப்போம். தி.மு.க. கூட்டணி யில் இணை வார்கள் என்ற யூகங் களை முற்றிலு மாக புறந்தள்ளி விட்டு ஊழல் கூட்டணி களில் சேராமல் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

அவரவர் பலத்தை தனித் தனியாக நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கி யமான சூழ்நிலையே. எங்களை பொறுத்த வரையில், 

கூட்டணி அமைக்க வேண்டும் என்று நினைத்தது வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற் காகவே. இந்த தேர்தல் பல சவால் களை சந்திக்க இருக்கிறது.

ஆனால் பா.ஜ.க. முழு பலத்தோடு, ஒரு நேர்மையான கட்சியாக, வளர்ச்சியை முன்னிறுத்தும் கட்சியாக, பல மாநிலங்களில் நிரூபித்த நல்லாட்சியை, 


மத்தியில் நிரூபித்த நல்லாட்சியை, தமிழகத்திலும் நிறுவவேண்டும் என்ற எங்களது நம்பிக்கை நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க. முதல் அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறிய தாவது:-

தே.மு.தி.க. இதற்கு முன் பலமுறை மக்களுடன் தான் கூட்டணி. வேறு யாருடனும் கிடையாது என்று கூறியது. 

ஆனால் பின்னர் கூட்டணி வைத்தனர். உதாரண மாக கடந்த பாராளு மன்ற தேர்தலு க்கு முன்பு கள்ளக் குறிச்சி மாநாட்டில் தனியாக போட்டியி டுவதாக கூறி விட்டு பின்னர் பாரதீய ஜனதாவுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்தார்.

தனித்து போட்டியி டுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் அவர் உறுதியாக இருப்பாரா என்பது தான் எனது கேள்வி. இவ்வாறு அவர் கூறினார்.


ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறிய தாவது:-

தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று மகளிர் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப் பட்டு இருக்கிறது. தி.மு.க. வுடன் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி அமைத்து விட்டார் என்றும், 

இத்தனை இடங்கள் உறுதியாகி விட்டது என்றும், உள்ளாட்சி தேர்தல் வரை பேசி முடித்து விடப்பட்டது. 

அது மட்டுமல்லாமல் அவருடைய கண்ணிய த்துக்கும், மதிப்புக்கும் களங்கம் ஏற்படு த்தும் விதத்தில் பெரும் தொகை எல்லாம் பேசப்பட்டு விட்டது 

என்று அரசல் புரசலாக செய்திகள் வருகின்றன என்றும் பல நாட்களாக ஊடகங் களிலும், ஏடுகளிலும் ஒரு நச்சு பிரசாரம் தே.மு.தி.க. மீது ஏவி விடப் பட்டது. அதன் பின்னணி யார் என்பதை இப்போது நான் கூற விரும்ப வில்லை.

ஆனால் அந்த பொய் பிரசாரம் அத்தனை யையும் மகளிர் மாநாட்டு உரை மூலம் தவிடு பொடியாக்கி விட்டார் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு எனது மனமார்ந்த பாராட் டுக்கள். 


தமிழக அரசியலில் அ.தி.முக., மற்றும் தி.மு.க. இரண் டையும் ஆட்சிக்கு வர விடக் கூடாது என்ற தே.மு.தி.க. நிலைப்பாடு தமிழக அரசியலில் ஆரோக்கி யமான எதிர் காலத்தை உருவா க்கும். இவ்வாறு வைகோ கூறி யுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறிய தாவது:-

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மக்கள் நலன் சார்ந்து, தன் இயக்கம் நலன் சார்ந்து தனித்து போட்டி என்ற இறுதி முடிவை சட்டமன்ற தேர்தலு க்காக அறிவித்து இருக்கிறார்.

எந்த இயக்கத் துக்கும் ஒரு அரசியல் முடிவினை எடுப்ப தற்கு முழு அதிகாரம் உண்டு. அந்த வகையில் விஜயகாந்தின் முடிவு அமைந்து இருக்கிறது. 

மேலும் மிக முக்கியமாக யூகங்களும், வதந்தி களும் உண்மை ஆகாது என்பதற்கு இந்த முடிவு எடுத்துக் காட்டு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

நீங்கள் விஜய காந்த் அணியில் சேர்வீர்களா? என்று ஜி.கே.வாசனிடம் கேட்டதற்கு, த.மா.கா.வின் கூட்டணி குறித்து மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு பிறகு அறிவிப்பேன் என்பதை நான் ஏற்கனவே கூறி இருக் கிறேன். 


தற்போது அந்தநிலை யில் எந்த மாற்றமும் இல்லை’ என்று பதிலளி த்தார்.
Tags:
Privacy and cookie settings