பொதுவாக நரம்புகள், ரத்த ஓட்டம், தசைகள், எழும்புகள் மற்றும் பல உடல் உறுப்புகளை உள்ளடக்கிய அமைப்புகளைக் கொண்ட உண்ணத் தகுதியுள்ள உயிரினங் களையே அசைவம் என்று குறிப்பிடு கின்றோம்.
இதன் அடிப்படையில், உடல் உறுப்புகள் முழுமையாக வளர்ச்சி அடையாத நிலையில் உள்ள முட்டை சைவமா அல்லது அசைவமா என சிந்திக்கும் போது நமக்கு இரண்டு விதமான கருத்துக்கள் கிடைக்கின்றன.
அவை என்னென்ன என்று பார்ப்பதற்க்கு முன், முட்டையைப் பற்றிய ஒருசில விவரங்களை தெரிந்து கொள்வோம். முட்டை யிலிருந்து வெளிவந்த ஒரு பெட்டை கோழியானது பருவமடைந்த பின்,
தனது 18 அல்லது 20 வார (தோராயமாக 5 மாதங்கள்) ஆயுட் காலங்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கிறது.
தனது 18 அல்லது 20 வார (தோராயமாக 5 மாதங்கள்) ஆயுட் காலங்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கிறது.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், எந்த ஒரு சேவலின் உதவியும் இன்றியே ஒரு பெட்டை கோழியால் முட்டையிட முடியும். அதாவது, சேவலும், கோழியும் இணையாமலே, கோழியானது முட்டையிடும் தன்மையை பெற்றுள்ளது.
இவற்றை "கருவுறாத அல்லது கருவற்ற" முட்டைகள் எனலாம். சேவலுடன் இணைந்த பின் இடப்படும் முட்டைகளை "கருவுற்ற அல்லது கருவுள்ள முட்டைகள்" எனலாம்.
மேலே கூறிய இரண்டு கருத்துக்கள் இவையே. "கருவுள்ள" முட்டைகளை அடைகாக்கும் பொழுது மட்டுமே முட்டையில் இருந்து குஞ்சானது தக்க காலத்தில் வெளிப்படும்.
சேவலுடன் இணையாமல் இடப்பட்ட ("கருவற்ற") முட்டைகளை அடைகாத் தாலும் அவைகள் குஞ்சு பொரிப்ப தில்லை. பெரும்பாலும் இந்த "கருவற்ற" முட்டைகளே அதிக அளவில் உணவுக்காக உற்பத்தி செய்யப் படுகின்றன.
மேலும், இந்த "கருவற்ற" முட்டை களுக்கும், "கருவுள்ள" முட்டை களுக்கும் இடையில், சுவையிலோ, சத்திலோ பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை என்றே கூறப்படு கிறது.
அப்படி யென்றால், கரு உற்பத்தி ஆகாத, கருவே அற்ற முட்டைகள் எவ்வாறு அசைவமாக இருக்க முடியும்?
அப்படி யென்றால், கரு உற்பத்தி ஆகாத, கருவே அற்ற முட்டைகள் எவ்வாறு அசைவமாக இருக்க முடியும்?
ஒரு வேளை தக்க காலத்தில் உள் செலுத்தப்படும் கருவினால் (சேவலின் இணைப்பால்) ரத்தமாகவும், நரம்பாகவும், தசையாகவும், எழும்பாகவும் (அசைவமாக)
தன் மாற்றம் பெரும் ஆற்றல் பெற்றுள்ள முட்டையின் "மஞ்சள் மற்றும் வெள்ளை கருக்கள்" கருவற்ற முட்டைகளில் உண்மையில் அசைவத்தின் எந்த ஒரு அமைப்பா கவும் இல்லை.
தன் மாற்றம் பெரும் ஆற்றல் பெற்றுள்ள முட்டையின் "மஞ்சள் மற்றும் வெள்ளை கருக்கள்" கருவற்ற முட்டைகளில் உண்மையில் அசைவத்தின் எந்த ஒரு அமைப்பா கவும் இல்லை.
ஆதலால், முட்டை அசைவமாக இருக்க வாய்ப்பில்லை. நாம் உணவாக உட்கொள்ளும் கீரை, காய், பழம் முதலியவை முறையே ரசம், ரத்தம், தசை, எழும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்கிலம், சுரோணிதமாக மாற்ற மடைவதாக கூறப்படுகிறது.
இதில் முட்டையானது உணவிற்க்கும், ரத்தத்திற்க்கும் இடையில் உள்ள "ரசம்" என்பதுடன் ஒப்பிடலாம் என கருதுகிறேன்.
இதன் மூலமாக நான் கூற வரும் கருத்து என்ன வென்றால்... "கருவற்ற முட்டைகள்" அல்லது "வளர்ச்சி யடையாத கருவுள்ள முட்டைகள்" ஆகியவை கண்டிப்பாக அசைவம் கிடையாது.
அப்படி யென்றால் சைவமா? எனக்கேட்டால், அது எனக்குத் தெரியாது என்பது மட்டுமே உண்மை!
அப்படி யென்றால் சைவமா? எனக்கேட்டால், அது எனக்குத் தெரியாது என்பது மட்டுமே உண்மை!
ஆனால், கண்டிப்பாக அசைவம் கிடையாது என்பது எனது கருத்து. ஒருவேளை சைவத்திற்க்கும், அசைவத்திற்க்கும் இடைப்பட்ட ஒன்று என்று கூறுவது சற்று ஏற்புடையதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
வேண்டு மானல் நாம் இதற்கு முசைவம் (Eggetarian) என்று தனிப்பெயர் கூட வைத்துக் கொள்ளலாம்.
வேண்டு மானல் நாம் இதற்கு முசைவம் (Eggetarian) என்று தனிப்பெயர் கூட வைத்துக் கொள்ளலாம்.