72 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்கும் ஜான்சன் & ஜான்சன் !

1 minute read
அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக 
72 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்கும் ஜான்சன் & ஜான்சன் !
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். 

இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக்குலின் பாக்ஸ் இறந்தார். 

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறிய அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான 

முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறி விட்டது என தெரிவித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர். 

இதன் இந்திய மதிப்பு ரூ. 493.50 கோடி ஆகும். இது சம்பந்தமான சுமார் 1000 வழக்குகள் மிசவுரி மாநில நீதிமன்றத்திலும், சுமார் 200 வழக்குகள் நியூஜெர்ஸி கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளன. 
72 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்கும் ஜான்சன் & ஜான்சன் !
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடர்களில் ‘டால்கம்’ பயன்படுத்தப்படுகிறது. 

இந்த டால்கம் பொருளால் புற்றுநோய் ஏற்படுகிறது என தெரிய வந்ததையடுத்து, அமெரிக்காவில் பெரும்பாலான அழகுசாதனப் பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் டால்கம் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டன. 

எனினும், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தொடர்ந்து டால்கமை பயன்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் பவுடரை பயன்படுத்த நமது பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings