பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸிலிருந்து சுமார் 66 கி.மீ தொலைவில் Marne என்ற நதிக்கரைக்கு அருகில் பிரித்தானியா போர் வீரர்களின் நினைவிடம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த வரலாற்று புகழ்பெற்ற நினைவிடத்தை அவமதிக்கும் விதத்தில் நிர்வாணமாக நின்ற இரண்டு போலீஸாரின் குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 1914ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற போரில் பிரித்தானியாவை சேர்ந்த சுமார் 3,740 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த வீரர்களின் உயிரிழப்பை நினைவுப்படுத்தும் விதத்தில் போர் நிகழ்ந்த இடத்தில் இந்த நினைவிடம் எழுப்பப்பட்டது.
இந்த பகுதிக்கு கடந்த ஜூன் 22ம் தேதி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு போலீஸார் சாதாரண உடைகளுடன் அங்கு வந்துள்ளனர்.
மது போதையில் இருந்த அந்த போலீஸார், நினைவிடத்திற்கு வந்ததும் திடீரென தங்களுடைய ஆடைகளை நீக்கி விட்டு நினைவிடத்தை நோக்கி நிர்வாணமாக நின்றுள்ளனர்.
இதனை அருகில் இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்த உடனடியாக ராணுவ போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில் தங்களுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
27 மற்றும் 31 வயதுடைய அந்த இரண்டு போலீஸாரின் மீதிருந்த குற்றம் தொடர்பான வழக்கு நேற்று பாரீஸ் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
போரில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் பிரித்தானிய நாட்டின் இறையாண்மையும் அவமதிக்கும் விதத்தில் செயல்பட்ட
இரண்டு போலீஸாருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும் 15 யூரோவும் அபராதமாக விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால், தங்களுடைய தவறிற்கு மன்னிப்பு கோரி குற்றத்தை இரண்டு போலீஸாரும் ஒப்புக் கொண்டுள்ளதால், இருவருக்கும் தலா 1,000 யூரோ அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.