உலகக் கோப்பை டி20 போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக நடனமாடுவதாக பாகிஸ்தான் நடிகை கந்தீல் பலூச் தெரிவித்துள்ளார்.
நானும் நடிகையாக்கும், மாடல் அழகியாக்கும் என்று கூறிக் கொள்பவர் பாகிஸ்தானை சேர்ந்த கந்தீல் பலூச். நம்ம பூனம் பாண்டே போன்று ஏதாவது வீடியோ வெளியிட்டு
பிறரின் கவனத்தை ஈர்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். பாகிஸ்தானியர்கள் கோபப்பட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி முதலில் வீடியோ வெளியிட்டார்.
அதன் பிறகு ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றபோது கேப்டன் ஷாஹித் அப்ரிதியை பைத்தியம் என திட்டினார்.
தற்போது உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் தான் நிர்வாணமாக நடனமாடுவதாகக் கூறி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, அப்ரிதி உங்கள் மீது கோபப்பட்டு நான் திட்டியதை எல்லாம் மறந்துவிடுங்கள். எல்லோருக்கும் தான் கோபம் வரும். தயவு செய்து இந்தியாவை தோற்கடியுங்கள்.
அப்படி செய்தால் அப்ரிதி நீங்கள் என்ன கேட்டாலும் செய்வேன் என்று இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார்.
அப்ரிடியின் சர்ச்சைக்குரிய கருத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்ற அப்ரிடியின் கருத்து
தனக்கு அதிர்ச்சியும், அதிக மன வேதனையும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜாவீத் மியாண்டட் அளித்த பேட்டியில், இது போன்ற கருத்துக்களை கூறியதற்காக வீரர்களே வெட்கப்பட வேண்டும்.
உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்தார். இக்கருத்து குறித்து பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் சங்கம் அப்ரிடியின் கருத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அதில் பாகிஸ்தானின் நலனுக்கு எதிராக உள்ளது எனவும், இக் கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்டு தனது கருத்தை அப்ரிடி திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தாவில் நேற்று முன்தினம் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் அணித் தலைவர் அப்ரிடி:-
எனது கிரிக்கட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். எமக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பு சிறப்பானதாகும்.
பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள். கொல்கத்தாவில் விளையாடுவதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை.
இந்தியாவில் கிரிக்கட் விளையாடும் போது கிடைக்கும் ஆனந்தத்தை உலகில் வேறு எங்கும் நான் அனுபவித்தது கிடையாது.
அப்ரிடியின் இந்த கருத்தால் பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.