4 வயது குழந்தையின் தலையை துண்டாக்கிய கொலைகாரி !

1 minute read
ரஷ்யாவில் 4 வயது பெண் குழந்தையை வெட்டி கொன்று விட்டு தலையை கையில் பிடித்துக் கொண்டு வீதியில் நடந்து சென்றதற்கான காரணத்தை கொலைகார பணிப்பெண் பொலிசாரிடம் விளக்கியுள்ளார்.
4 வயது குழந்தையின் தலையை துண்டாக்கிய கொலைகாரி !
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நேற்று பெண் ஒருவர் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை தூக்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்ற போது பொலிசாரால் கைது செய்யப்பட்டார். 

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலைக்கான காரணத்தை பொலிசாரிடம் Gyulchekhra Bobokulova (38) என்ற பெயருடைய அந்த பெண் வாக்குமூலமாக அளித்துள்ளார். 

மத்திய ஆசியாவில் உள்ள Uzbekistan நாட்டில் எனது கணவருடன் வசித்து வந்தேன்.

சில மாதங்களுக்கு முன்னாள் இங்கு மாஸ்கோவில் பணிப்பெண்ணாக வேலை கிடைக்க கணவரை விட்டு விட்டு மாஸ்கோவில் குடியேறினேன். 

இங்கு Nastya Meshcheryakova என்ற 4 வயது குழந்தையை பராமரிக்க என்னை பணிப்பெண்ணாக பெற்றோர்கள் நியமித்தனர். 

4 வயது குழந்தைக்கு மனநலம் சிறிது பாதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், தாய்நாட்டில் உள்ள எனது கணவர் மற்றொரு பெண்ணை மறுமணம் செய்துக் கொண்டதாக எனக்கு தகவல் வந்தது. 

இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும், ‘என்னை இரண்டாவது மனைவியாக இருக்குமாறு எனது கணவர் கூறியதும் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 
4 வயது குழந்தையின் தலையை துண்டாக்கிய கொலைகாரி !
இதே கோபத்துடன் வேலை செய்யும் வீட்டிற்கு சென்றபோது, என் மூளைக்குள் வினோதமான ஒலிகள் எழுந்தது. ‘குழந்தையை உடனடியாக கொல்லுமாறு அந்த ஒலிகள் எனக்கு உத்தர விட்டன.

உடனே சமையல் அறைக்கு சென்று கத்தி எடுத்து வந்து குழந்தையின் தலையை வெட்டி துண்டாக்கினேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஆனால், மாஸ்கோவில் இந்த பணிப்பெண்ணை பற்றி மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மாஸ்கோ நகரில் பணிப்பெண்ணிற்கு புதிதாக ஒரு காதலன் கிடைத்துள்ளான். 

அவருடன் இந்த பெண் நெருங்கி பழகி வந்தபோது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பதை அறிந்த அதிர்ச்சியில் இந்த கொலையை செய்ததாகவும் கூறப்படுகிறது. 
பொலிசாரிடன் பிடியில் உள்ள அந்த பணிப்பெண், குழந்தையின் தலையை வெட்டிய இடத்தை பொலிசாரை அழைத்துச் சென்று காட்டியுள்ளார். 

பணிப்பெண்ணை கைது செய்துள்ள பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings