அவுஸ்திரேலியாவிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு குடியிருந்த நபர், நீண்டகாலமாக வாடகை செலுத்தத் தவறியதால், அவரை அங்கிருந்து வெளியேறுமாறு வீட்டின் உரிமையாளர் உத்தரவிட்ட பின்,
சிறுநீர் நிரப்பப்பட்ட 200 போத்தல்களை குடியிருப்பாளர் அங்கு வைத்து விட்டுச் சென்றுள்ளார். மெல்போர்ன் நகரிலுள்ள வீடொன்றின் உரிமையாளருக்கே இந்த அதிர்ச்சி அனுபவம் ஏற்பட்டுள்ளது.
இவ்வீட்டின் உரிமையாளரான ரொஹன் ஜேம்ஸ், 2013 ஒக்டோபரிலிருந்து இவ்வீட்டை நபர் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியிருந்தார்.
இவ்வீட்டின் உரிமையாளரான ரொஹன் ஜேம்ஸ், 2013 ஒக்டோபரிலிருந்து இவ்வீட்டை நபர் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கியிருந்தார்.
ஆனால், அண்மைக் காலமாக அக்குடியிருப்பாளர் வாடகை வழங்கவில்லையாம். அதனால், அவரை அவ்வீட்டிலிருந்து வெளியேறுமாறு ரொஹான் ஜேம்ஸ் கூறினார்.
இதனால், ஆத்திரமடைந்த வாடகைக் குடியிருப்பாளர் வீட்டிலிருந்து வெளியேறும் போது சிறுநீர் நிரப்பப்பட்ட 200 போத்தல்களை அவ்வீட்டில் வைத்து விட்டுச் சென்றுள்ளார்.
மென்பான போத்தல்கள் உட்பட பல்வேறு வகையான போத்தல்களில் சிறுநீர் நிரப்பப் பட்டிருந்தது.
அத்துடன், வீடு முழுவதும் அலங்கோலப்படுத்தப் பட்டிருந்த தாகவும் ரொஹான் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.