65 லட்சம் சம்பளத்தில் பணிபுரிய இந்திய மாணவன் தேர்வு !

1 minute read
சமூக வலை தளமான பேஸ்புக் நிறுவனம், சர்வதேச அளவில் பிரபலமான சமூக வலை தளமான பேஸ்புக், தங்களின் நிறுவனத்துக்கு, திறமையான ஆட்களைத் தேர்வு செய்யும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
65 லட்சம் சம்பளத்தில் பணிபுரிய இந்திய மாணவன் தேர்வு !
கடந்தாண்டு இந்தியாவில் இருந்து இரண்டு மாணவர்களை, வளாகத் தேர்வு மூலம், இந்நிறுவனம் தேர்வு செய்தது. இதில் ஒருவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்.

இந்தாண்டும் டில்லி ஐ.ஐ.டி.,யில், பேஸ்புக் நிறுவனம் சார்பில் வளாகத் தேர்வு நடந்தது. இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும், அன்கூர் தாகியா என்ற மாணவர் தேர்வு செய்யப் பட்டார். 

இவருக்கு, ஒரு ஆண்டுக்கு 65 லட்ச ரூபாய் சம்பளமாக தரப்படும் என, அந்நிறு வனம் உறுதி அளித்துள்ளது.
தாகியா, படிப்பு முடிந்தவுடன், கலிபோர்னி யாவில் உள்ள பேஸ்புக் நிறுவன த்தில், புரோகிராமராக பணியில் சேர்த்துக் கொள்ளப் படுவார்.

இது குறித்து தாகியா கூறுகையில், "பேஸ்புக் வலை தளத்தில் பணிபுரிய வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறை வேறியுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings