அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா டிஸ்மிஸ் !

சென்னை கோட்டை யில் கால் நடைத்துறை அமைச்சர் அலுவல கத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் – 3, 2016) களை கட்டிக் கொண்டி ருந்தது.
அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா டிஸ்மிஸ் !
தேடி வந்தவர் களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி.

செய்தித் துறையி லிருந்து பேசிய ஒரு குரல், “சார், சானலை மாத்தாமல், ‘அம்மா’, டி.வி. சானலை பாருங்க” என்றது. அப்போது தான் மந்திரி சின்னை யாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. 

முதல் செய்தியாக, ‘மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பி லிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு’ என்றது டி.வி. அறிவிப்பு.

அடுத்த கவளத்துக்கு இடைவெளி விட்டு விட்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டி ருந்த சின்னையா, கலக்க த்துடன் எழுந்து கையைக் கழுவ, 

அதே நிமிடத்தில் அவரை மந்திரி பதவியி லிருந்தும் நீக்கி தலைமை ‘கை’ கழுவி யிருந்த செய்தி டி.வி.யில் திரும்பத் திரும்ப கேட்க ஆரம்பித்தது.

சாப்பாட்டை ஓரந்தள்ளி விட்டு, அறையை விட்டு எழுந்த முன்னாள் மந்தி ரியாகிப் போன சின்னையா, அரசுக் கார் சாவியை உதவி யாளரிடம் ஒப்ப டைத்து விட்டு,

வெளியி லிருந்து வரவ ழைக்கப் பட்ட இன்னொரு காரில் அங்கிருந்து உடனடி யாகக் கிளம்பி விட்டார். 

சின்னையாவைப் பார்க்க அங்கிருந்த செய்தி யாளர்கள் வருவ தற்குள் அவரது கார் பட்டினப் பாக்கத்தை தொட்டு விட்டது.
யார், இந்த சின்னையா ? அதிமுக மந்திரி சபையில் அசைக்க முடியாத (அதாவது மாற்ற முடியாத) சக்தியாக கடைசி வரை இருந்த 11 மந்திரி களில் ஒருவர். 

இப்போது அந்த எண்ணி க்கை 11-ல் இருந்து 10 ஆக சுருங்கி விட்டது.(முதன் முதலில் காலி செய்யப் பட்ட மந்திரி சீட் இசக்கிப் பாண்டியனுக் குரியது, 

இப்போது கடைசி (?!) மந்திரி ‘சீட்’ டாக காலியாகி யிருப்பது சின்னையா வுக்குரியது) இன்னும் மந்திரி களின் பட்டியல் சுருங் கலாம், 

அல்லது ஒரு நாள் என்றள விலாவது யாராவது திடீர் மந்திரி ஆகலாம் அது தனிக்கதை. அதிமுகவின் முன்னோ டிகளில் ஒருவரான முனு ஆதியை தெரியாத கட்சிக் காரர்கள் இருக்க முடியாது.

அவருடைய அக்கா மகன் தான் டி.கே.எம். சின்னையா. 1988-89 களில் பெரிதாய் கட்சியில் வெடித்த ஜா. அணி, 

ஜெ. அணி என்ற போராட்ட காலங்களில் ஜெ.வுக்கு ஆதரவாக களம் இறங்கியவர் முனுஆதி. அவருடைய அக்கா மகன் என்ற அடையா ளமும்,

அதே அளவு விசுவாச த்தையும் காட்டக் கூடிய வாய்ப்பும் ஒரு நாள் சின்னை யாவுக்கு வந்தது. 

மாவட்டச் செயலாளராக இருந்த சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்.பி.யிடம் வேட் பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு ஒப்படை க்கப்பட்டி ருந்தது. 

அவரும் கட்சியில் சீனியர் என்ற முறையில் சின்னையா பெயரோடு மூவர் பெயரை தலைமைக்கு அனுப்பி வைத்தார். 

அதில் கடைசியாக இருந்த பெயரான டி.கே.எம். சின்னையாவை வேட்பாளராக ‘டிக்’ அடித்தார் ஜெயலலிதா. தேர்தலும் வந்தது, சின்னை யாவும் வென்றார். 

வெற்றி அறிவிப் புக்கு முன்னதாக, தேர்தல் செலவுக்கு கட்சி கொடுத்த பணத்தில் செல விட்டது போக, எஞ்சியதை அப்படியே கொண்டு போய் ஜெயலலிதா விடம் கொடுத்தார்.

“ஓட்டு வீட்டில் இருந்தாலும், உங்கள் நேர்மை மாளிகை போல் பிரமா ண்டமாக இருக்கிறது” என்று வாழ்த்தி அனுப்பிய ஜெயலலிதா முதல்வ ரானார், சின்னை யாவும் மந்திரியானார்.
சின்னையா வின் மனமென்னும் அந்த மாளிகை தான் வாழ்த்தி மகிழ்ந்த அதே ஜெயலலிதா வால் இப்போது இடிக்க ப்பட்டிருக் கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவு
காஞ்சி மாவட்டம் என்றால் அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் எம்.பி.யாக இருந்த சிட்லப் பாக்கம் ராஜேந்திரன். 

இவருடைய உதவி யாளர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக வெளியான வீடியோ இவரைக் கட்சிப் பதவியி லிருந்து காலி செய்தது.

கடந்த ஐந்தாண்டில் ‘சிட்லப் பாக்கம்’ என்ற பெயரே காஞ்சி மாவட்ட அதிமு கவில் இல்லாமல் இருந்தது. 

அப்படிப்பட்ட சிட்லப் பாக்கத் தாரை பிப்ரவரி 29- ம்தேதி சந்திக்க அப்பாய் ண்ட்மெண்ட் கொடுத்தி ருந்தார் ஜெயலலிதா.
அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா டிஸ்மிஸ் !
அன்றே சிட்லப்பாக்க த்துக்கு ரீ- என்ட்ரீ இருக்கும் என்று கோட்டை ஏரியாவில் சலசலப்பு ஓடியது. 

ஜெ.வின் எண்ண வோட்டம் பைபாசில் போனதால் அது சின்னையா வின் பொறுப்பையும் காலி செய்து, அவரது கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியையும் காலி செய்துள்ளது.

அத்தோடும் நிற்க வில்லை, வேகம்… காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் தண்டரை மனோகரன் எம்.எல்.ஏ. பதவியையும் காலி செய்தது. 

சிட்ல பாக்கம் ராஜேந்திரன், ஜெ சந்திப்பின் போதே காஞ்சி மாவட்டத் துக்கான புதிய நிர்வாகிகள் லிஸ்டை ஜெ. கேட்டு வாங்கிக் கொண்டு விட்டார்.

அதில், தன்னுடைய கட்சி பொறுப்பு போன போது, பட்டாசு வெடித்துக் கொண் டாடிய தண்டரை மனோகரன் இடத்துக்கு வேறு பெயரை எழுதிக் கொடுத்தி ருந்தார் ராஜேந்திரன். 

இது மொ த்தமும் ஒன்றாக, ஒருங்கி ணைந்த மாவட்டச் செயலா ளராக தற்காலிக நியமன த்தில் சிட்லப் பாக்கம் ராஜே ந்திரனை உட்கார வைத்தி ருக்கிறது.

திருப்பத்தை விதைத்த காஞ்சி. மகளிர் மாநாடு

நால்வர் அணியில் முக்கியமான ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், பழனி யப்பன் ஆகிய மந்திரி களை, காஞ்சி மகளிரணி மாநா ட்டில் பங்கேற்க தலை மையில் இருந்து சிக்னல் கொடுக்க வில்லை. 
மந்திரிகள் எடப்பாடி பழனிச்சாமி, வைத்தி லிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச் சந்திரன் ஆகியோருக்குத் தான் அங்கு போகும்படி உத்தரவு. 

அதிலும், வேண்டா வெறுப்பாக அங்கே அனுப்பி வைக்கப் பட்டவர் மந்திரி வைத்தி லிங்கம். முதல்வர் ஜெயலலிதாவின் குட்-புக் கிலிரு ந்தவர் மந்திரி வைத்திலிங்கம். 

ஓ.பி.எஸ். மீதான கோபம் தான், மீனவரணி ரமேஷ், வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ. மற்றும் தேனி, திண்டுக்கல் நகர செயலா ளர்கள் இருவர் நீக்கமும் என்பது நேற்றைய தகவல். 

இன்றும் அதன் தொடர்ச் சியாகத் தான் தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலன் நீக்கமும் நடந்தி ருக்கிறது.

சின்னை யாவை ஏன் காலி செய்தார் ஜெ. ?

அதெல்லாம் சரி, டி.கே.எம். சின்னையா யாருடைய ஆதரவாளரும் இல்லையே… அவரை ஏன் நீக்கி னார்கள்?’ என்றால், ‘அவரும், தாம்பரம் நகரச் செயலாளர் கரிகாலனும் நகமும், சதையு மாக இருக்கிற வர்கள். 

இங்கே அடிச்சா, அங்கே வலிக்கும் என்ற ஸ்டைல் நீக்கம் இது’ என்று பதில் வருகிறது. அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலாளர் எம். கூத்தன் அந்த இடத்துக்கு போஸ்டிங் செய்யப் பட்டிருக்கி றார்.

புதுக்கோட்டை விஜயபாஸ்கர் நீக்கம் ஏன் ?

மந்திரி வைத்திலி ங்கத்தின் தீவிர ஆதர வாளராக இருப்பவர், புதுக் கோட்டை விஜய பாஸ்கர். ஏற்கனவே பதவி பறிப்புக்கு ஆளாகி ரீ- என்ட்ரீ ஆனவர் மந்திரி விஜய பாஸ்கர். 

தற்போது இவரை லேசாக ‘டச்’ செய்வது போல் புதுக் கோட்டை மா.செ. பதவியை மட்டும் பறித்து அங்கே பி.கே.வைர மணியை மா.செ.வாக போஸ்டிங் போட்டிரு க்கிறார்கள்.
விஜய பாஸ்கர் நீக்கத்துக்கு கட்சி வட்டாரத்தில், இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது. 

டி.கே. வைரமணி சார்ந்த சமூகத்தை குறிப்பிட்டு விஜய பாஸ்கர் ஏளனம் பேசியதாக சில மாதங்களுக்கு முன்பு மாவட்டத்தில் பிரச்னை வெடித்தது. 

அப்போது, விஜய பாஸ்கரை எதிர்த்து குறிப் பிட்ட சமூகத்தி னர் சாலை மறியல், போராட்டம் என்று நடத்தினர்.

அந்த நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா வை சந்தித்து விஜய பாஸ்கர், இது சிலரின் திட்ட மிட்ட சூழ்ச்சி, அதில் என்னை சிக்க வைக்கி றார்கள் என்று விளக்கம் கொடுத்தார். 

அமைச்சர் பதவியில் ரி-என்ட்ரி யாகி இருந்த புதிதில் மறுபடியும் விஜ யபாஸ்கரை பதவியில் இருந்து தூக் காமல் மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் ஜெயலலிதா. 

தற்போது, வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்ததாலேயே விஜயபாஸ்கர் பதவி பறிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா டிஸ்மிஸ் !
அதிமுக வைப் பொறுத்த வரை கட்சிக்கான மாவட்டச் செயலா ளர்கள் உள்ள கணக்கில் 50 மாவட் டங்கள் உள்ளன. அதில், திருவள்ளூர், வேலூர், காஞ்சி, விழுப்புரம், தேனி,

சென்னை மற்றும் கடலூர் உள்பட பத்து மண்டலங் களுக்கு ஓ.பி.எஸ். பொறுப்பில் இருக்கிறார். தொடர்ந்து நீக்கப் படுகிறவர் களும் அவருடைய பொறுப்பு எல்லைக் குள் இருப்ப வர்களே.

ஓ.பி.எஸ். சை அடுத்து வைத்தி லிங்கமும் முதல்வரின் களையெடுப்பு பட்டிய லில் இருக்கிறவர் என்பது நேற்று வரை அரசல் புரசலாக இருந்தது, இன்று வெளிப்படை யாக வெளியில் தெரிய ஆரம்பித்தி ருக்கிறது.

அதாவது இந்த களை யெடுப்பின் ஸ்டைலே அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்… அவர்கள் ஆதரவாளர்கள் தான் காலியாவார்கள். அந்த வகையில் 16 மந்திரிகள் இவர்கள் லைனில் இருப்பதாக தகவல்.

ஒருவரை இன்று பகல் முழுமை யாக ‘ஸ்கேன்’ செய்து முடித்து விட்டு தான் லேசாக ‘டச்’ கொடுத்தி ருக்கிறா ர்களாம்.
Tags:
Privacy and cookie settings