சத்தியராஜ், அமிதாப் போன்றவர்களை திரையில் பார்க்கும் போது சிலருக்கு பொறாமையாக இருக்கும், காரணம் உயரம்.
நமது சமூகத்தில் அறிவில் உயர்ந்து இருப்பினும், உயரத்தில் குறைவாக இருந்தால் கேலி, கிண்டலுக்கு ஆளாக தான் வேண்டியிருக்கிறது. உயரமாக இருப்பது தான் ஆண்மையா என்ன? இல்லவே இல்லை.
உயரமாக இருப்பவர்கள் விரைவாக இறந்து விடுவார்கள் என்று உலகளவில் பொதுவான கூற்று ஒன்று நிலவுகிறது.
அதற்கு ஏற்றார் போல உயரமாக இருப்பவர்களுக்கு தான் சில உடல்நல பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றன.
உயரமாகவும், உடல் பருமனுடனும் இருக்கும் ஆண்களுக்கு இரத்தக் கட்டிகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதாம்.
இதை ட்ரோம்சோ பல்கலை கழகத்தினர் ஆய்வின் மூலம் நிரூபனும் செய்துள்ளனர்.
முக்கியமாக இவர்களுக்கு நுரையீரல் மற்றும் கால்களில் இரத்தக் கட்டிகள் ஏற்படும் அபாயம் மற்றவர்களை விட 2.57% அதிகமாக இருக்கிறது.
ஆறடிக்கு மேல் உயரமாக இருக்கும் ஆண்கள் உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு அதிகம் நீங்கள் உயரமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்கு இடுப்பு / முதுகு வலி ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
குனியும் போதும், நிமிரும் போதும் அதிகமாக இவர்கள் ஸ்ட்ரெச் செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் தான் அதிகமாக இவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வில் நான்கு இன்ச் வீதம் நீங்கள் உயரம் அதிகரிக்க, அதிகரிக்க நோய் அதிகரிக்கும் அபாயமும் அதிகரிக்கிறது என தகவல் வெளியானது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உயரமாக இருக்கும் பெண்களுக்கு 28% அதிகமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என கண்டறியப் பட்டது.
அதாவது, நீங்கள் உயரம் அதிகமாக, அதிகமாக நிறைய கவனத் துடனும், உடலநல அக்கறையுடனும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மெலனோமா என்பது சரும புற்றுநோய் ஏற்படுத்தும் கட்டியோடு தொடர் புடையது ஆகும். உயரமான பெண்களுக்கு அதிகமாக சரும புற்றுநோய் தாக்கம் ஏற்படுகிறது என்றும் புற்றுநோய் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உயரமாக இருப்பவர் களுக்கு இதய நோய் பாதிப்புகள் குறைவாக தான் ஏற்படுகிறது. ஆய்வாளர்கள், 'உயரம் குறைவான நபர்களோடு ஒப்பிடுகை யில் உயரமான நபர்களுக்கு இதய பாதிப்புகள் குறைவு.
உயரம் குறைவான நபர்களுக்கு தமனிகள் சிறியதாக இருக்கிறது, இதனால் இரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்பட்டு இந்த விளைவுகள் ஏற்படுகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிரிஸ்டல் பல்கலைகழக நிபுணர்கள் கால்கள் நீளமாக உள்ள நபர்களுக்கு வாழ்நாள் அதிகமாக இருக்கிறது என ஓர் ஆய்வறிக்கை மூலமாக தெரிவித்துள்ளனர்.
உயரமாக இருப்பவர்களுக்கு இதயம் மற்றும் சுவாச பிரச்சனைகள் குறைவாக ஏற்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.