தெறி விஜயை திருமணம் செய்யும் டாக்டர் மித்ரா !

1 minute read
இளைய தளபதி விஜய் நடித்து வந்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட தாகவும், விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தெறி விஜயை திருமணம் செய்யும் டாக்டர் மித்ரா !
இந்நிலையில் இந்த படத்தின் இறுதியில் விஜயகுமார் ஐ.பி.எஸ் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் விஜய்க்கும், 

மித்ரா எம்.பி.பி.எஸ் என்ற டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடைபெறும் காட்சி படமாக்கப் பட்டதாக கூறப்படுகிறது. 

இருவர் பெயருடன் கூடிய அலங்கார பெயர்ப் பலகை ஒன்று வைக்கப் பட்டதாகவும், இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் மிக வேகமாக பரவி வருவதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத் தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings