அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரில் ஹிலாரி, ட்ரம்ப் முன்னிலை !

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்பும் முன்னிலை பெற்றுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரில் ஹிலாரி, ட்ரம்ப் முன்னிலை !
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. 

இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி தரப்பில் 15 பேரும் குடியரசு கட்சி தரப்பில் 31 பேரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். 

அவர்களில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வது என்பது குறித்து உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக தெற்கு கரோலினா மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் நேற்று முன்தினம் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

இதேபோல நிவேடா மாகாணத்தில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. 
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரில் ஹிலாரி, ட்ரம்ப் முன்னிலை !
இதில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி இரு கட்சிகளின் தரப்பில் 13 மாநிலங்களுக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

இதனிடையே, குடியரசு கட்சி வேட்பாளர்களில் முன்னிலை வகிக்கும் டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி தேர்தலில் நானும் ஹிலாரியும் நேரடியாக மோதக்கூடும் என தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings