விவசாயி பாலனின் டிராக்டர் தவணையை செலுத்த தயாராக இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித் துள்ளார். விவசாயி பாலனை டிராக்டரில் இருந்து இறக்கி போலீஸார் தாக்கிய வீடியோ பதிவு சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதனை பலரும் கண்டித்து தங்களது கருத்துக் களை பகிர்ந்து வருகிறார்கள்.மேலும், விஜய் மல்லையை மையப் படுத்தியும் இதில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், விவசாயி பாலனின் கடனை அடைக்க தயாராக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் விஷால் தெரிவித்து இருக்கிறார். விஷாலின் இந்த கருத்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக் களைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாலன் உங்களை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் உங்களுக்கு உறுதுணை புரிய விரும்புகிறேன்.
எனக்கு உங்களுடைய கடன் தவணைத் தொகை எவ்வளவு என்று தெரியாது. ஆனால், என்னுடைய உறுதுணையை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தி ருக்கிறார்.
விவசாயி பாலனின் கடன் தவணை விவரம்:
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன்(50). கடந்த 2011-ல் தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கி யுள்ளார். இந்தக் கடனுக்காக தலா ரூ.64 ஆயிரம் வீதம் 6 தவணை களைச் செலுத்தி யுள்ளார்.
இந்நிலையில், கடைசி 2 தவணைகள் நிலுவை இருந்த தாகவும், நெல் அறுவடை முடிந்த பின்னர் தவணைத் தொகையைச் செலுத்து வதாகவும் தெரிவித் துள்ளார்.
ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள், ரூ.32 ஆயிரத்தை முதலில் செலுத்துங்கள் என்று கூறி, அந்த தொகையைப் பெற்றுள் ளனர். சில நாட்கள் கழித்து அவரது டிராக்டரை ஜப்தி செய்யப் போவதாகத் தெரிவித் துள்ளனர்.
கடந்த 4-ம் தேதி அறுவடையில் பாலன் ஈடுபட்டிரு ந்தபோது, அங்கு வந்த பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, சரமாரியாக அடித்து ள்ளனர்.
பின்னர் அவரைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதுடன், டிராக்ட ரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதை யடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்கவும், அவரை விடுவிக்கவும் அவரது உறவின ர்களிடம் போலீஸார் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவரை விடுவித் துள்ளதாக சொல்லப் படுகிறது.