எந்த உணவுடன் எதனை சாப்பிடக்கூடாது?

நாம் உண்ணும் போது தவறான உணவு சேர்க்கையால் சில வித ஆரோக்கிய பிரச்சனை களை சந்திக்க நேரிடுகிறது. உதாரணத்திற்கு மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால் அதனுடன் இஞ்சி சாப்பிடக் கூடாது, அவ்வாறு சாப்பிட்டால் புட் பாய்சன் ஆகிவிடும்.
உணவுடன் எதனை சாப்பிடக்கூடாது?


தர்பூசணி மற்றும் பால்

தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடித்தால், அதனால் அசௌகரி யத்தை சந்திக்க நேரிடுவதோடு, வாய்வுத் தொல்லையையும் சந்திக்க நேரிடும். எனவே தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

பப்பாளி மற்றும் தண்ணீர்

பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே எப்போதும் பப்பாளி அல்லது தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளாதீர்கள்.
பப்பாளி மற்றும் தண்ணீர்


முட்டை மற்றும் பால்

இவை இரண்டிலும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், இவற்றை ஒரே நேரத்திலோ அல்லது அடுத்தடுத்தோ உட்கொண்டால், செரிமானமாவதில் சிக்கல் ஏற்பட்டு, சில நேரங்களில் சிலருக்கு வாந்தியை உண்டாக்கும்.

பால் கலந்த ஓட்ஸ்

பால் கலந்த ஓட்ஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் ஓட்ஸை பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால், ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச்சை செரிக்கச் செய்யும். நொதிகளை ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் அழித்து விடும்.

மேலும் ஆரஞ்சு ஜூஸில் உள்ள அமிலம் பாலை திரிக்கச் செய்து, உடலில் சளி தேக்கத்தை அதிகரிக்கும். எனவே இந்த உணவு சேர்க்கை களைத் தவிர்த்திடுங்கள்.
வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழம்  மற்றும் பால்


வாழைப்பழம் மற்றும் பால் தவறான உணவு சேர்க்கை களாகும். ஏனெனில் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, உடலில் சளி அதிகம் தேங்கும்.

மீன் மற்றும் பால்

மீன் சாப்பிட்ட உடனேயே பால் குடிக்கக்கூடாது என ஆயுர்வேதம் சொல்கிறது. ஏனெனில் மீன் மற்றும் பால் அடுத்தடுத்தோ அல்லது ஒன்றாகவோ உடலினுள் சென்றால்,

அதனால் உடலில் உள்ள இரத்த பாழாவதோடு, சீரான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்.
Tags:
Privacy and cookie settings