மகராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பெண்கள் நடனமாடும் மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக மும்பையில் உள்ள நடசத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்கங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்து வருகின்றன.
பெண்கள் நடனம் ஆடும் போது அவை கேமராவில் பதிவு செய்யப் படுவதற்கும், பணியின் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் பெண்கள் நடனத்துடன் கூடிய மதுபான பார்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பார்களின் வாசலில் மட்டும் தான் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். பார்களில் நடைபெறும் நடனத்தை நேரடியாக காவல் நிலையத்திற்கு ஒளிபரப்பக் கூடாது.
நடனம் ஆடும் இடத்திற்கும் பார்வையாளர்களின் இருப்பிடத்திற்கும் இடையில் எளிதில் பெயர்க்க முடியாத மூன்று அடி தடுப்பு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பையில் மட்டும் 70 ஆயிரம் நடன மங்கையர்கள் வேலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.