அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், இந்தத் தம்பதியின் வயது வித்தியாசம். கணவரின் வயதில் பாதி கூட இல்லை அந்தப் பெண்.
ஆனாலும் தான் பல மடங்கு சந்தோஷத்தை தனது கணவர் மூலம் அனுபவிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார். இருவரும் இணைந்து அளித்துள்ள வீடியோ பேட்டி யூடியூபை கலக்கி வருகிறது.
வைரல் ஆகியுள்ளது. அந்தக் கணவரின் பெயர் டேவிட் மேன்சன். மனைவியன் பெயர் அமி. டேவிட்டின் வயது 60. அமியின் வயது 27. இருவரும் மிக மிக சந்தோஷமாக தாம்பத்தியம் நடத்தி வருகின்றனராம்.
மற்ற எல்லா சந்தோஷமான தம்பதிகளைப் போலவே நாங்களும் முழுமையான கணவன், மனைவியாக திருப்திகரமாக வாழ்க்கை நடத்தி வருவதாக கூறியுள்ளார் அமி.
சந்தோஷ ரொமான்ஸ்
இது குறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் அளித்துள்ள பேட்டியில், நாங்கள் மிக மிக சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்கு இடையிலான ரொமான்ஸ் மிக மிக சந்தோஷமாக இருக்கிறது.
செம திருப்தி எஸ்.. எங்களது செக்ஸ் வாழ்க்கையும் பிரமாதமாக இருக்கிறது. இன்னும் சொல்வதானால், அபாரமாக இருக்கிறது.
எனது கணவருடன் உறவில் ஈடுபடும் போது முழுமையான சந்தோஷத்தை, திருப்தியை அனுபவிக்கிறேன். அதை வெறும் வார்த்தையால் சொல்ல முடியாது.
வயசா முக்கியம்
எனக்கும், எனது கணவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் உங்களுக்குத் தான் தெரிகிறது.
எங்களுக்குத் தெரியவே இல்லை. எங்களுக்குள் எந்த இடைவெளியும் இல்லை என்பதை இது உங்களுக்கு உணர்த்தும்.
பெஸ்ட்!
எங்களைப் போல வயது வித்தியாசத்துடன் கூடியவர்கள் திருமணம் செய்தால் சிறப்பாக இருக்காது என்பது பொய். நாங்களே அதற்கு சிறந்த உதாரணம்.
மிகச் சிறப்பான செக்ஸ் வாழ்க்கையை இப்போதும் கூட நாங்கள் அனுபவிக்கிறோம்.
ஆனந்தம்
60 வயதுக்காரருடன் செக்ஸ் என்பது பிறருக்கு வித்தியாசமாக தெரியும். ஆனால் அது எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.
நாங்கள் மிகப் பரந்த மனதுடையவர்கள். என் வயதை உடைய ஆணை விட எனது கணவர் மிகச்சிறந்தவர்.