தமிழகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர், பொன்.ராதா கிருஷ்ணன், சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது: வாக்காளர் களுக்கு வழங்கு வதற்காக தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி அளவுக்கு பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப் பட்டுள்ள பணம் எள்ளளவு தான்.
இன்னும் அதிக பணம் பத்திரமாக அனைத்து தொகுதி களுக்கும் ஏற்கனவே, சென்று சேர்ந்து விட்டது. பதுக்கி வைக்கப் பட்டுள்ள பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பாஜக தனிப்பெரும் பான்மையோடு ஆட்சியை பிடிக்கும். பாஜக வெற்றியை தவிர்க்க முடியாது. இது குறித்து நாராயணசாமி கூறிய கருத்து அவருடைய சொந்த கருத்தாகும்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், 2 நாட்கள் முன்பு இதேபோன்ற பண பதுக்கல் குற்றச்சாட்டை சுமத்தி யிருந்தார். அதிமுக வினரிடம் மட்டுமல்லாது,
காங்கிரஸ் கட்சியினரிடமும் பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ள தாகவும், அவர்களிடமும் சோதனை நடத்த வேண்டும் என்றும் தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.