100 டிகிரியைத் தாண்டி வெயில்.. கொதிக்கும் தமிழகம் !

1 minute read
நெருப்பை அள்ளி தலையில் போட்டது போல இருக்கிறது தமிழகத்தில் வெயிலின் உக்கிரம். இன்று 7 நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்தது.
100 டிகிரியைத் தாண்டி வெயில்.. கொதிக்கும் தமிழகம் !
தலைநகர் சென்னை முதல் நாகர்கோவில் வரை எங்கு பார்த்தாலும் வெயில் தான். எந்தப் பக்கம் போனாலும் வெயில் வெளுத்துக் கட்டிக் கொண்டி ருக்கிறது.

சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன் ஹீட்டுக்குள் தான் இருக்கிறது என்றாலும் கூட வெயிலின் தாக்கம் 105 டிகிரிக்குச் சமமாக உள்ளது. 

தமிழகத்திலேயே அதிக அளவாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய நகரங்களில் தான் வெயில் அதிகமாக உள்ளது. இங்கு தலா 102 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி யுள்ளது.

அதே போல திருச்சி, சேலம், கரூரில் தலா 101 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி யுள்ளது திண்டுக்கல் நகரில் 100 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி யுள்ளது.
மதுரை, கோவை, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரிக்குள் வெயில் இருந்தாலும் கூட கடும் அனலாக இருக்கிறது 105 டிகிரி அளவிலான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 

இப்போதைக்கு கொடைக்கானல், ஊட்டியைத் தவிர வேறு எங்குமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு எந்தப் பக்கம் போனாலும் வெயிலாக இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings