போலீஸ் சுட்டதில் அறுந்த மின்கம்பி தாக்கி 11 பேர் பலி !

அசாமில், காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டின் போது, உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
அசாம் மாநிலம் தின்சுக்கியா மாவட்டத்தில் உள்ள பங்கிரீ என்ற இடத்தில், காவல் நிலையம் முன்னர் சிலர் போராட்டம் நடத்தினர். அப்போது, கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் போராட்டக்காரரகளை கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது, அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பி மீது குண்டுகள் பட்டு, அறுந்து விழுந்தது.

மின் கம்பி அறுந்து விழுந்ததில் அங்கிருந்த போராட்டக்காரர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்னர் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களை தண்டிப்பதற்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது விபரீதம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings