திரைப்படத்தை பதிவிறக்கம் செய்யும் அதி நவீன வசதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செல்போன்களில் திரைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி, தற்போது 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் செல்போன்களில் ஒரு திரைப் படத்தை பதிவிறக்கம் (டவுண்லோடு) செய்ய 8 நிமிடங்கள்களுக்கு மேல் ஆகின்றன.
இந்நிலையில், ஒரு திரைப்படத்தையும் 5 வினாடியில் பதிவிறக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை இங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை, முன்னணி நிறுவனங்களுடன் நிறுவனங்களான “சாம்சங்” மற்றும் “பியூஜித்சூ” ஆகியவற்றுடன் இணைந்து அதிவேக தொழில்நுட்பத்தில் இயங்கும் மொபைல் இண்டர் நெட்டை உருவாக்கியுள்ளனர். தற்போதுள்ள இன்டர்நெட் வேகத்தை விட 100 மடங்கு அதிகமாக இது செயல்படக் கூடியது.
இதை “5ஜி” என்றும் அழைக்கிறது. ஆயினும் இது அதிகாரப்பூர்வமான “5ஜி” என்று அறிவிக்கப்பட்வில்லை என்பது குறிப்பிடத்தக்கது