28 விரல்களைக் கொண்ட அசாதாரண மனிதர் !

இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக
விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர் மாதம் கின்னஸ் சாதனை நூலில் பதிவு செய்யப்பட்டவர்.

43 வயதான தேவேந்திர சுதாரின் ஒவ்வொரு கைகளிலும் தலா 7 விரல்கள் காணப்படுகின்றன. அதேபோன்று ஒவ்வொரு கால்களிலும் தலா 7 விரல்கள் காணப்படுகின்றன. 

தனது கை, கால்களிலுள்ள மேலதிக விரல்களை இறைவன் தனக்கு அளித்த கொடை என அவர் கருதுகிறார். தச்சுத்தொழிலாளியாக தேவேந்திர சுதார் பணியாற்றுகிறார். 
இந் நிலையில், தான் பணியாற்றும் போது மேற்படி மேலதிக விரல்களை தற்செயலாக தான் வெட்டி விடக்கூடும் என அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
https://adf.ly/11443827/kusibu
28 விரல்களுடன் காணப்படும் தேவேந்திர சுதாரை பார்வையிடுவதற்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings