தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப் பட்டுள்ளது. அதுவும் 2 மணி நேரத்தில் 15 பேரை கொண்ட 2 கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 9 தினங்களே உள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட் டுள்ளன.
மக்கள் நலக்கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதி களிலும்,
விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியி டுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டி யிடுகிறது.
எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்பது பற்றி கடந்த சில தினங்களாக ஆலோசனை நடை பெற்றது. இந்த நிலையில் தேமுதிக இன்று மாலை முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார்.
— Oneindia Tamil (@thatsTamil) April 13, 2016
அதில் விஜயகாந்தின் 5 ம் நம்பர் ராசிப்படி முதற்கட்டமாக 5 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியானது.