சட்டசபை தேர்தலில் 166 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக நேரடியாக களத்தில் மோத உள்ளன. அதிமுக கூட்டணியில், மதுராந்தகம் ( தனி ) - செ.கு.தமிழரசன் ( இந்திய குடியரசு கட்சி ), திருச்செந்தூர் - சரத்குமார் ( சமத்துவ மக்கள் கட்சி ),
காங்கேயம் - தனியரசு ( தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ), நாகப்பட்டினம் - தமிமுன் அன்சாரி ( மனிதநேய ஜனநாயக கட்சி ),
ஒட்டன் சத்திரம் - மனிதநேய ஜனநாயக கட்சி, கடைய நல்லூர் - ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக்),
திருவாடானை - கருணாஸ் - முக்குலத்தோர் புலிப்படை ஆகிய 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்ப ட்டுள்ள நிலையில், எஞ்சிய 227 தொகுதிகளில் அதிமுக போட்டி யிடுகிறது.
இதனிடையே திமுக இன்று தங்கள் கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளு க்கான வேட்பாளர் பட்டியலை அறிவித் துள்ளது.
இதனிடையே திமுக இன்று தங்கள் கட்சி போட்டியிடும் 173 தொகுதிகளு க்கான வேட்பாளர் பட்டியலை அறிவித் துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், மக்கள் தே.மு.தி.க., பெருந் தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவபடை,
தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
இதில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. தி.மு.க. 173 தொகுதிகளில் களம் இறங்குகிறது.
திருச்செந்தூர் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமாரை எதிர்த்து, திமுகவின் அனிதா ராதா கிருஷ்ணன் களம் காண்கிறார்.
திருச்செந்தூர் தொகுதியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமாரை எதிர்த்து, திமுகவின் அனிதா ராதா கிருஷ்ணன் களம் காண்கிறார்.
மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் செ.கு.தமிழரசனை எதிர்த்து, நெல்லிக்குப்பம் புகழேந்தி களமிறங்க உள்ளார்.
ஒட்டன் சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணி யிலுள்ள மனித நேய மக்கள் கட்சி போட்டி யிடுகிறது. திமுக சார்பில் சக்கரபாணி போட்டி யிடுகிறார்.
ஒட்டன் சத்திரம் தொகுதியில் அதிமுக கூட்டணி யிலுள்ள மனித நேய மக்கள் கட்சி போட்டி யிடுகிறது. திமுக சார்பில் சக்கரபாணி போட்டி யிடுகிறார்.
திருவாடானை தொகுதியில் அதிமுக கூட்டணியின் கருணாசை எதிர்த்து, திமுக சார்பில் சு.ப.திவாகரன் போட்டியிட போட்டியிட உள்ளார்.
மற்ற 3 தொகுதிகளில் அதிமுகவின் தோழமை கட்சிகளுடன், திமுகவின் தோழமை கட்சிகள் மோத உள்ளன.
மற்ற 3 தொகுதிகளில் அதிமுகவின் தோழமை கட்சிகளுடன், திமுகவின் தோழமை கட்சிகள் மோத உள்ளன.
கும்மிடிபூண்டி, திருத்தணி, மதுரவாயல், அம்பத்தூர், பெரம்பலூர், ராயபுரம், மைலாப்பூர், திருப்பெரும்புதூர், சோளிங்கர், வாணியம்பாடி, ஆம்பூர், ஒசூர், கலசப்பாக்கம், செய்யாறு, விழுப்புரம்,
உளுந்தூர் பேட்டை, ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, நாமக்கல், ஈரோடு கிழக்கு, தாராபுரம், காங்கேயம், கோபி, உதக மண்டலம்,
சூலூர், தொண்டா முத்தூர், கோவை தெற்கு, வேடசத்தூர், கரூர், கிருஷ்ண ராயபுரம், மணப்பாறை,
திருச்சி கிழக்கு, முசிறி, பெரம்பலூர்- தனி, ஜெயங்கொண்டம், பண்ருட்டி, காட்டுமன்னார் கோயில், பூம்புகார், நாகப்பட்டிணம், வேதாரண்யம்,
நன்னிலம், பாபநாசம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மதுரை வடக்கு, திருமங்கலம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, ராமநாதபுரம்,
முதுகுளத்தூர், திருவைகுண்டம், ஓட்டபிடாரம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, நாங்குநேரி,
குளச்சல், விளவன்கோடு, கிள்ளியூர் ஆகிய 61 தொகுதிகளில், திமுகவின் தோழமை கட்சிகள் போட்டியிட உள்ளன.
திமுக கூட்டணி போட்டியிட உள்ள இந்த 61 தொகுதிகள் மற்றும் அதிமுக கூட்டணி போட்டியிடும் 7 தொகுதிகள் ஆகிய
68 தொகுதிகளை கழித்து பார்த்தால், திமுகவும் அதிமுகவும் இம்முறை 166 தொகுதிகளில் நேருக்கு நேர் மோத உள்ளன.