மாதவிடாய் நேரங் களில் பெண்க ளுக்கு மிகவும் உடல் சோர்வு ஏற்படும். சில பெண்கள் தாங்க முடியாத வலியால் அவதிப் படுவார்கள். ஆனாலும், வேலை யில் இருக்கும் பெண்கள் இந்த உபாதை களையும் பொறுத்துக் கொண்டு
வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இங்கிலா ந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் கோ எக்ஸ்சிஸ்ட் என்ற நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் பணிபு ரிந்து வருகி றார்கள்.
இந்த நிறுவனத்தில் நிர்வாக குழு கூட்டம் நடை பெற்றது. அதில் மாத விடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த விடு முறையை மருத்துவ விடுப்பாக கருதாமல் ‘ஆஃப்’ ஆக கருதப்படும் என நிறுவனம் கூறி உள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் டைரக்ட ர்களில் ஒருவரான பெக்ஸ் பாஸ்டர் கூறும் போது, மாத விடாய் நேரங்களில் பெண்கள் எவ்வளவு கஷ்டப் படுவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
சிலர் வலியால் துடிப் பார்கள். அவர்கள் அதை வெளிக் காட்ட முடியாமல் தவிப்பார்கள்.
இது இயற்கை யாக பெண்களுக்கு ஏற்படும் ஒரு அசௌகரியம். எனவே தான் அவர் களுக்கு விடுமுறை வழங்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம் என்று கூறினார்.
மாத விடாய் காலத்தில் பெண்க ளுக்கு விடு முறை அளிக்கும் முறை சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.