தேர்தல் விழிப்புணர்வு விளம்பர படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி., தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான படக்காட்சிகள் வெளிவரவுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா விழிப்புணர்வு படம் நடிக்க அழைப்பு விடுத்துள்ளோம்.
விழிப்புணர்வு விளம்பர வீடியோ படப்பிடிப்புக்காக ரூ.10 லட்சம், சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக ரூ.10 லட்சம், எப்.எம். ரேடியோ மூலம் ஒலிபரப்புவதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.