உங்களுக்கு பொருத்தமான பணியை தேர்ந்தெடுப்பது ?

bநல்ல சம்பளத்தில், நல்ல வேலை வேண்டும் என்று ஆசைப்படும் அதே நேரத்தில்,


நாம் எந்த வேலைக்குப் பொருத்த மானவர்கள் என்பதையும் ஆராய வேண்டும்.

நம்முடைய திறமைகள், தகுதிகள் மற்றும் பின்னணிகள் குறித்து சுய பகுப்பாய்வை மேற்கொண் டாலொழிய,

பொருத்தமான பணியை நாம் பெறுவ தென்பது இயலாத காரியமே.

எனவே சுய பகுப்பாய்வு தொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப் பட்டுள்ளன.

தொழில்ரீதியிலான பகுப்பாய்வு வேலை தேடுதலில் உள்ள மிகப் பிரதானமான அம்சம் என்ன வெனில்,

உங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தையும், தொழில் முறை குறிக்கோள் களையும் பகுப்பாய்வு செய்வதாகும். 

ஏனெனில், நம்மில் பெரும் பாலானோர், உள்ளார்ந்த திறன்கள் மற்றும் விருப்பங் களைக் கண்டு கொள்வதில்லை.

இதனால் தான், பல்வேறான சிக்கல்களை சந்திக்கிறோம்.

நேர்முகத் தேர்வின் போது, சம்பிரதாய மாக கேட்கப்படும் “உங்களைப் பற்றி சொல்லுங் களேன்”

என்ற கேள்விக்கு சாதாரண மாகவும், தெளிவாகவும் பதில் சொல்ல பலரும் திணறுவர். 

எனவே தான், உங்களின் உள்ளக் கிடக்கையைப் பகுப்பாய்வு செய்வது முக்கியமான செயல்பாடு என்கிறோம்.

கீழ் வரும் கேள்வி களுக்கு பதில் சொல்லிப் பாருங்கள், வாழ்க்கையில் நான் என்ன செய்ய விரும்புகிறேன்?

என்னுடைய பணி நோக்கங்கள் என்னென்ன?

என்னுடைய நீண்டகால லட்சியங்கள் என்னென்ன?

அடுத்த 5 அல்லது 10 வருடங்களில் எனது நிலை என்னவாக இருக்கும்?


எனது குறுகியகால பணி குறிக்கோள் என்ன?

எனது பணி விருப்பங்கள் என்னென்ன?

எனது பணி முன்னுரிமைகள் என்னென்ன?

மேற்கூறிய கேள்விகளுக்கு தெளிவான பதிலளித்து பழகி விட்டாலே போதும்,

உங்களின் வேலை விஷயத்தில் ஒரு தெளிவான முடிவை உங்களால் எடுக்க முடியும்.

பின்புல பகுப்பாய்வு ஒரு வேலையைத் தேடும் முன்பாக உங்களது கல்வி மற்றும்

தொழில் முறை பின்னணிப் பற்றி யோசித்துக் கொள்ள வேண்டும். 

மேலும், எந்த வகையான பணி நிலைகள் உங்களுக்கு ஒத்து வரும்?

நீங்கள் விரும்பும் பணி நிலைகளுக்கு ஏற்றவாறு உங்களின் கல்வித் தகுதி இருக்கிறதா?

போன்ற அம்சங் களையும் விரிவாக யோசிக்க வேண்டும்.

ஏனெனில், உங்களிடம் சிறந்த கல்வித் தகுதிகள் இருக்கலாம் மற்றும் பிரமாதமான அனுபவங்கள் இருக்கலாம்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட பணிக்கான நேர்முகத் தேர்வின் போது,

அப்பணிக்கு நீங்கள் எவ்வாறு பொருந்துகிறீர்கள் என்பதை மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள். 

எனவே, நேர்முகத் தேர்வின் போது, உங்களது கல்வி மற்றும் அனுபவப் பின்னணி குறித்து

குறைந்த பட்சம் 2 நிமிடங்கள் வரை நேர்மறையாக பேசுவதற்கு பயிற்சி எடுக்கவும்.

திறன் மதிப்பீடு ஒவ்வொரு விதமான பணியை செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட விதமான திறன்களும், தகுதிகளும் தேவைப்படும். 

எனவே, உங்களிடம் இருக்கும் திறன்கள் மற்றும் தகுதிகள் பற்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும்.


இத்தகைய மதிப்பாய் வானது, உங்களின் உள்ளார்ந்த மற்றும் கற்றல் மூலமான திறன்கள் ஆகிய

இரண்டையும் சார்ந்தது. உள்ளார்ந்த திறன் என்பது உங்களது ஆளுமையோடு தொடர்புடையது. 

கற்றதன் மூலமான திறன்கள் மற்றும் உள்ளார்ந்த திறன்களுக்கு சில உதாரணங்கள் கற்றல் மூலமான

திறன்கள் கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங், டேட்டா ப்ராசஸிங், மார்க்கெடிங், வாகனம் ஓட்டுதல், நிர்வாகம்,

கலந்துரை யாடுதல், வெளிநாட்டு மொழி, பிசினஸ் ரைட்டிங், இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ், 

பேரம்பேசும் திறன், பொதுமக்கள் தொடர்பு, தொழில் முறையாக பேசுதல், கவனித்தல், மேலாண்மை, திட்டமிடுதல்,

ஒருங்கிணைதல், பொதுக்கூட்ட உரை, விற்பனை, மேற்பார்வை, நேர மேலாண்மை, கற்பித்தல் மற்றும் பயிற்சி.
உள்ளார்ந்த திறன்கள் சூழலுக்கேற்ப மாறிக் கொள்ளுதல், பகுப்பாய்வு செய்தல், அழுத்தம்

திருத்தமாக பேசும் திறன், உறுதித் தன்மை, பரந்த மனப்பான்மை, தைரியம், படைப்புத் திறன், முடிவெடுத்தல்,

ராஜதந்திரம், விவேகம், சுயதிறம், தொலை நோக்குப் பார்வை, கற்பனைத் திறன், முன்முயற்சி,

தலைமைத் துவம், உற்சாகப் படுத்தல், சீரிய நோக்கம், பொறுமை, விடாமுயற்சி,

வளமை, அக்கறை, உடல்திறன் மற்றும் குழு ஒருங்கிணைப்பு முதலில், 

உங்களிடம் இருக்கும் திறன்களை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.


அடுத்ததாக, நீங்கள் சேரக்கூடிய பணிக்குத் தேவையான திறன்கள் எவை என்று அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பொருத்தமான பணியைத் தேடுதல் உங்களுக்குப் பொருத்தமான பணியைத் தேடுவதில் பலவிதமான நுட்பங்களை கையாள வேண்டும்.

தொழில் முறை சார்ந்த நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், 

ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரித் தோழர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்,

பல விதமான இணைய தளங்களில் தேடுதல் உள்ளிட்ட பலவிதமான வழி முறைகளைப் பயன்படுத்தி, உங்களுக் கான பொருத்தமான பணியைத் தேடலாம்.
Tags:
Privacy and cookie settings