கடையில் அழுகும் நிலையில் அல்லது அழுகிய பழங்களை வாங்கி வந்து நன்றாக பிசைந்து அதனுடன் 1கிலோவிற்கு 1/2 கிலோ என்ற அளவில் நாட்டுச்சக்கரை (மன்ட வெல்லம்)
சேர்த்து நன்றாக கலக்கி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் 15 நாட்கள் நன்றாக நொதிக்க விட வேண்டும், இடைப்பட்ட நாட்களில் காலையும்., மாலையும் நன்கு கிளறி விட வேண்டும்.
15வது நாள் அக்கரைசலை வடிகட்டி 1லிட்டருக்கு 10லிட்டர் தண்ணீர் சேர்த்து ஸ்பிரே செய்தால் நல்லதொரு வளர்ச்சி கண்கூட தெரியும்.
இதனால் பயிர்களுக்கு இலை வழி ஊட்டம் கிடைக்கும். இவ்வாறு எளிய முறையில் கிடைக்கக்கூடிய வளர்ச்சி ஊக்கிக்கு பதில் எதற்காக வெடிமருந்துகளைப் (யூரியா) பயன்படுத்த வேண்டும்.
ரெண்டு தார் அழுகிய வாழைப்பழம் - 50₹
நாட்டுச்சக்கரை 1Kg- 50₹
இவ்வளவு எளிதான ஒரு வளர்ச்சியூக்கிக்கு பதில் விலை அதிகமுள்ள யூரியா வை ஏன் வாங்க வேண்டும்? சிந்திப்போம். பழங்கள்,
நாட்டுச்சக்கரை இரண்டுமே இனிப்பு சுவை உள்ளதால் பயிர்களின் சுவை சற்றே அதிகமாக இருக்கும்.
ஏற்கனவே கீரைகளை வாங்கிய நண்பர்கள் பலரும் இயற்கை வழி விவசாயத்தில் விளைந்த கீரை அதிகமாக சுவை உடையது என்பதை கூறியுள்ளனர். இயற்கையை சுவைப்போம்.