எந்த தலைவருக்கும் ஈடு இணை இல்லா தலைவர் காமராஜர் !

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம், அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய 


பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங் களிலும் 

இரயில் நிலையங் களிலும் வெகு சாதாரண மாகக் காணப்படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகி யிருந்தது .

நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் .

மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் … காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . 

நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் .

அவரோ மறுத்து விட்டார் . சுற்றி நின்றிருந்த வர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று .

அப்பொழுது நேரு சொன்னார் ; ” காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் ,

இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது ” ,என்றார்

பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .

நேர்மை

தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்தி லும்


ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . 

இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் .

ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது … 

அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : 

என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக் கான்னே தெரியல. என்னையும் மெட்ராசுக்கு

அழைச்சிக் கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் ” என்று சொல்ல .

அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :

அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்க ணுமா வேணாமான்னு ? .

அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் .

அப்புறமா அம்மாவை பாக்க, ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . 

இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் .

முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான்

எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் என்றார்.

குடும்பத் திற்க்கு அப்பாற்பட்டவர்

காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் .

அவரது உடலுக்கு ஈமச்சடங் குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய .

அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க …

அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார்

உண்மைக்கு உதாரணம்

காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச் சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன்,

ஒரு முறை விருது நகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . 

அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார்.

உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து,


அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.

பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்து விட்டு விசாரித்த காமராஜர்,

எத்தனையோ தாய் மார்கள்பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது ,

உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? 

முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே. இது கூட சலுகை, லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு

அந்த மின் விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத் திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லி விட்டார் .

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், ‘கொஞ்சம் நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார்.

அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், ‘அதுக்கா இந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!

மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார்.

என்றைக் காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

சுற்றுப் பயணத்தின் போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், ‘கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்ச ரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. ‘நீ இங்க வந்துட்டா உன்னைப் பார்க்கச் சொந்தக் காரங்க வருவாங்க.

அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு’ என்று சொல்லி விட்டார்.


அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்ட போதும் மறுத்து விட்டார்!

பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்ட போது தடுத்தார்.

‘நான் உயிரோடு தான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?’ என்று கமென்ட் அடித்தார்!

இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார்.

‘கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டார்.
மேலும்
Tags:
Privacy and cookie settings