நடிகர் சங்கத் தேர்தலில் கடைசி நேரம் வரை வாக்களிக்க வரவில்லை அஜீத். காரணம், அவருக்கு அப்போது தான் காலில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது.
புதிய நிர்வாகம் பொறுப்புக்கு வந்த பிறகு நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
இப்போது நடை பெறவிருக்கும் நட்சத்திரக் கிரிக்கெட் நிதி திரட்டல் நிகழ்ச்சி யிலும் அஜீத் பங்கேற்க மாட்டார் என்று தான் சொல்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து சிம்புவும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். விஜய்க்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. அவர் வருவதாக எந்த கமிட் மெண்டும் தரவில்லையாம்.
அஜீத் ஏன் பங்கேற்க வில்லை. அவர் நட்சத்திரக் கிரிக்கெட்டை கடுமையாக எதிர்க்கிறாராமே?
என்கிற கேள்விகள் தொடர்ந்து பல தரப்பிலி ருந்தும் நடிகர் சங்கத்தை நோக்கி வர... அதற்கு ஒரு அதிரடி பதிலை தயார் செய்துள்ளது விஷால் தரப்பு.
அந்த பதிலறிக்கையில், நடிகர் சங்கம் மற்றும் அதன் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கும் அஜீத், சிம்பு ஆகியோரை கடுமை யாகச் சாடியுள்ளனர்.
அறிக்கையின் ஒரு பகுதி இது (மீதியை ஏற்கெனவே தந்திருக்கிறோம்): ஒரு சில நடிகர்கள் தங்களது பண வசதியைக் காட்டவும், பொதுக் குழுவில் கலந்து கொள்ளாமலும்,
தனது ரசிகர் களைக் கொண்டு தனது திரைக் குடும்பத்தையே விட்டுக் கொடுத்து அவர்கள் சுய விளம்பரம் செய்கிறார்கள்.
கலைத்துறை சார்ந்த எந்த ஒரு விழாவையும் முதலில் புறக்கணித்து வருபவர்களும் அவர்களே. நட்சத்திர கிரிக்கெட்டால் மக்களின் பணம் சுரண்டப் படுகிறது,
நடிகர் சங்கம் பிச்சை எடுக்கிறது என்று தனது ரசிகர் களைத் தூண்டி விட்டு விளம்பரம் செய்வதால் என்ன பயன்? நடிகர் நடிகைகள் பிச்சைக் காரர்கள் அல்ல.
அவர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி நாடக நடிகர்கள் வாழ்வு முன்னேற அன்றைய தங்களது வருமான த்தை விட்டு விட்டு நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனர்.
தனது ரசிகர்களு க்குக்கூட முக்கியத் துவம் தராத ஒரு சில நடிகர்களுக்கு, நாடக நடிகர்க ளின் முக்கியத் துவம் தெரிய வாய்ப்பு இல்லை.
ஒரு சில நடிகர் களின் ரசிகர்கள் யார் எந்த நல்லது செய்தாலும் முதலில் அவர்களை கேலி செய்வ தற்கு ஒதுக்கும் நேரத்தில் நலிந்த நாடக நடிகர்களின் வாழ்க்கை அறிய வேண்டும்.
தன்னால் செய்ய முடியாத நல்ல காரியங் களை நல்ல மனம் படைத்த சில நடிகர்கள் செய்யும் போது அவர்களை வாழ்த்த வேண்டாம்.
அவர்களை வருந்தச் செய்யாமல் இருந்தாலே போதும். பழங்கால த்தில் நாம் செய்யும் உதவி யாருக்கும் தெரியாதவாறு செய்ய வேண்டும் என்றனர்.
ஆனால் இக்கால சூழ்நிலையில் நாம் செய்யும் உதவி அடுத்த வருக்கு தெரிய வேண்டும், அப்போது தான் அதை அறிந்து நான்கு பேர் மற்றவருக்கு உதவுவார்கள்.
இங்குள்ள அனைத்து நடிகர்க ளுக்கும் ரசிகர்கள் உண்டு என்பதை அந்த நடிகர்கள் அறிய வேண்டும்.
அந்த ரசிகர்க ளுக்கு பகுத்தறிவு, வேலை, நல்ல மனம் உள்ளதால் அவர்கள் அவர் வழியில் செல்கி ன்றனர். அவர்க ளுக்கு அடுத்தவ ர்களைக் குறை கூறவோ, பழி சொல்லவோ அவசியம் இல்லை.
சில நடிகர்கள் சொல் வதைப் போல், நடிகர் சங்கக் கட்டிடம் நடிகர் களின் சொந்த செலவில் கட்டப்பட வேண்டும் மக்களைச் சுரண்டக் கூடாது என்கிறார்களே.
அவர்கள் நடித்த படம் பார்க்க ரசிகர்கள் பணம் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகு தானே திரைய ரங்கம் உள்ளே விடுகி றார்கள்?
அந்நேரம் அந்த நடிகர்கள் என் ரசிகர் களிடம், மக்களிடம் காசு வாங்காதீர் என்று அறிக்கை விட வேண்டியது தானே?
அல்லது தாங்கள் நடித்த படம் மூலம் மக்கள் காசு சுரண்ட ப்படக் கூடாது என்று நினைத்தால் இலவசமாக படம் நடித்து திரையிட வேண்டியது தானே?
இந்திய கிரிகெட் அணி விளையா ட்டைக் காண நுழைவுக் கட்டணம் பெற்று தான் செல்ல வேண்டும். அதற்காக இந்திய அணி விளையாட்டில் மக்கள் பணம் சுரண்டப் படுகிறது என்று குற்றம் சாற்று வர்களோ?
தன்னிடம் பணம் இருக்கு என்பதற்காக வீட்டில் இருந்து தனது பண ஆளுமையை காட்டும் சில நடிகர்களால் பணம் இல்லாத வாழ்வாதாரத் திற்கே கஷ்டப்படும் நடிகர்களின் மனதை எவ்வாறு அறிய முடியும்?
சினிமா என்பது ஒரு பொழுது போக்கு? அவர்கள் அவர்களது திரைக் குடும்ப தேவைகளை சரி செய்ய அனைத்து நடிகர்களும் ஒன்று கூடி
நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கு கொள்கின்றனரே தவிர அவர்களது சொந்த செலவு க்கு அல்ல என்பதை அறிய வேண்டும்.
விவாதம் செய்யும் நடிகர்கள் ஒரே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் முதலில் அவர்கள் அவர்களின் திரைக் குடும்பத்திற்கோ, ரசிகர்களுக்கோ நாம் என்ன செய்தோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.