சசிகலா யாருடைய பினாமியாகவும் செயல்படவில்லை இறுதி வாதம் !

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தற்போது இறுதி வாதம் நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பு, புகார்தாரர் தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்தை நிறைவு செய்த நிலையில், 

இன்று சசிகலா தரப்பு இறுதி வாதம் நடைபெற்றது. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்ததுடன், சசிகலா மீதான குற்றச்சாட்டுக்களையும் மறுத்தார்.

“ஜெயலலிதா – சசிகலா இடையே தொடர் பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறுவதில் உண்மை இல்லை. ஒரே வீட்டில் வசித்ததால் வருமானத்தை பெருக்கியதாக கூறுவதில் ஆதாரம் இல்லை. 

சசிகலா யாருடைய பினாமியாகவும் எப்போதும் செயல்படவில்லை. விசாரணை அமைப்பின் குற்றச்சாட்டுகள் தவறு என்பது சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று சசிகலா வழக்கறிஞர் வாதாடினார்.

இதேபோல் இளவரசி, சுதாகரன் தரப்பு இறுதி வாதமும் இன்று நடைபெற உள்ளது.
Tags:
Privacy and cookie settings