முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர்
இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள். முக்கிய தலைவர்களின் வேட்புமனு தாக்கலை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள். முக்கிய தலைவர்களின் வேட்புமனு தாக்கலை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா இன்று மதியம் 12.45 மணியளவில் பழைய வண்ணாரப் பேட்டையில் உள்ள மாநகராட்சி
மண்டல அலுவலகம் 4ல், தேர்தல் அதிகாரி பத்மஜா தேவியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதன் அதை முன்மொழிய உள்ளார்.
அதிமுக சார்பில் எஞ்சிய 226 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் 28ம் தேதி (வியாழக்கிழமை) ஒரே நாளில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கின்றனர். திருவாரூரில் இன்று திமுக தலைவர் கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கருணாநிதி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருவாரூருக்கு சென்று சன்னதி தெருவில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கினார்.திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அவருடைய தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்கு இன்று (திங்கட்கிழமை) காலை செல்கிறார்.

பின்னர் மதியம் 2 மணி அளவில் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மீனாட்சியிடம், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இதேபோல கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் வைகோ, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்.