பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தால் உலகத் தலைவர்கள் பலருக்கும் சிக்கல் !

பனாமா நாட்டிலிருந்து செயல்பட்டு வரும் மோசாக் ஃபொன்சேகா & கோ நிறுவனத்தின் கோடிக்கணக்கான ஆவணங்கள் வெளியானதால் பெரும் பணக்காரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தால் உலகத் தலைவர்கள் பலருக்கும் சிக்கல் !
உலகம் முழுவதும் இருந்து அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், மற்றும் முக்கிய பிரபலங்களின் ஊழல்கள் இதனால் வெளிப்பட்டுள்ளது.

பனாமா நாட்டிலிருந்து செயல்படும் மோசாக் ஃபொன்சேகா & கோ என்ற ரகசிய நிதி ஆலோசனை நிறுவனம் உலகம் முழுவதும் 40 இடங்களில் அலுவலகம் வைத்துள்ளது. 

இந்நிறுவனம் பெரும்பணக்காரர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கும் நிறுவனமாக கடந்த 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

அரசுகளின் வரிவிதிப்பை எப்படி ஏமாற்றுவது, பணத்தை சட்டத்தை மீறி பாதுகாப்பாக எப்படி முதலீடு செய்வது என்பது வரை அனைத்து ஆலோசனைகளும் இந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தின் மூலம் ஆலோசனை பெற்ற உலகின் பல நாடுகளில் அதிபராகப் பதவி வகித்த அரசியல்வாதிகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு, 

சொத்துக்களை போலி உரிமையாளர் மூலம் பராமரித்தல் உள்ளிட்ட பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் தற்போது வெளியாகி யிருப்பதால் முதலில் பெரும் பாதிப்பை சந்திருப்பது ஐஸ்லாந்து பிரதமர் சிக்மந்துர் குன்லாஸோ தான். 

அவரது பல்வேறு ஊழல்கள் இந்த ஆவணங்களின் மூலம் வெளிப்பட்டுள்ளதை யடுத்து பதவி விலகக் கோரி ஏராளமான மக்கள் நாடாளுமன்ற கட்டடத்தின் முன் போராட்டம் நடத்தினர். 

மேலும் ரஷ்ய அதிபரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஏராளமான பெரும் பணக்காரர்கள் தற்போது ஊழல் வழக்குகளில் சிக்கவுள்ளனர்.

இந்நிலையில், வெறும் லெட்டர் பேட் நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், அலுவலக ஹவுஸ் கீப்பிங் பணியாளர்கள் 
பெயரில் போலி நிறுவனங்களை நடத்துதல் உள்ளிட்ட நடைமுறைகள் மூலமே இந்த ஏமாற்று வேலைகள் நடத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அதற்கும், உறுதியான சட்டதிட்டங்கள் இல்லாத சிறு தீவு நாடுகளையே இந்நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ள தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Tags:
Privacy and cookie settings