தமிழகத்தின் முதலமைச்சராவதற்கு விஜயகாந்திற்கு தகுதி இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் அவரது மனைவியும், கட்சியின் மகளிர் அணித் தலைவருமான ராதிகா சரத்குமார் ஈடுபட்டு வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ராதிகா, திமுகவில் நடைபெறும் குடும்ப அரசியலை மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் பேசுவது என்னவென்று அவருக்கே புரியாத நிலையில் மக்களுக்கு எப்படி புரியும்.
விஜயகாந்தின் திறமை குறித்து அவருடன் பல திரைப்படங்களில் நடித்தவர் என்ற முறையில் தனக்குத் தெரியும். முதலமைச்சர் ஆகும் தகுதி அவருக்கு இல்லை என்று பேசினார்.