பெற்ற மகன்களை 45% தள்ளுபடியில் விற்பனை என்று பேஸ்புக்கில் பதிவு செய்த பெண்ணுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டென்னிஸ்ஸே மாகான த்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகன்களின் கைகள் கட்டப்பட்டு, வாயை டேப்பால் ஒட்டியிருப்பது போல்,
ஒரு புகைப் படத்தை தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருப்பது பெறும் சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது, இதன் காரணமாக அவர் தற்போது காவல் துறையின் விசாரணை வளை யத்தில் உள்ளார்.
அந்த பேஸ்புக் பதிவில், இவர்கள் மோசமாக இருப்பதால் இவர்கள் 45% தள்ளுபடி விற்பனையில் கிடைப்பார்கள் என்றும் பதிவிட்டிருந்ததால், பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனத்திற்கும் அந்தப் பெண் ஆளானார்.
இந்த புகைப்படம் காவல் துறையின் கவன த்திற்கு சென்ற பின்னர், அப்பெண் தற்போது காவல் துறையின் விசாரணை வளை யத்தில் சிக்கி யுள்ளார்.
இது குறித்து, அப்பெண்ணின் உறவினர், ஒருவர் அளித்த விளக்கத்தில் அது வெறும் நகைச்சுவைக்காக செய்த செயல் என்று தெரிவித்துள்ளார்.
பேஸ் புக்கில் லைக்குகள் வாங்குவதற்காக, சிலர் ஆபத்தான வகையில் போட்டோக்கள் எடுப்பதும்,
இவ்வாறான சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டு வருவதும் கவலை யளிக்கும் விஷயங்களாக மாறி வருவதால்
இனி இவ்வாறான செயல் களில் கவன முடன் இருத்தல் வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து ள்ளனர்.