உலக விண்வெளி ஆய்வில் மிக முக்கிய அத்தியாயத்தை நோக்கி இந்திய விண்வெளி ஆய்வும மையமான இஸ்ரோ பயணித்து வருகிறது. மிக அதிக எடையை சுமந்து செல்லும்
புதிய ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு இருக்கிறது. மண்ணெண்ணெயில் இயங்கும் எரிபொருள் அமைப்புடன் தயாராகி வரும் இந்த ராக்கெட் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்திய ராக்கெட்டுகளை கண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ராக்கெட் தயாரிப்பு நிறுவனங்கள் கிலி பிடித்த நிலையில், தற்போது இந்த புதிய ராக்கெட் அவர்களது கவலையை மேலும் அதிகமாக்கி யிருக்கிறுத.
அதே நேரத்தில், இந்த புதிய ராக்கெட், இந்திய விண்வெளி ஆய்வின் வல்லமையை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஒரே நேரத்தில் 22 செயற்கை கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட்டை அடுத்த மாதம் விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.
இது இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த வேளையில், மிக அதிக எடையை சுமந்து செல்லும் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
அதாவது, இந்த ராக்கெட் 10 டன் எடையுடையே செயற்கை கோள்களை சுமந்து கொண்டு ஜியோசிங்க்ரோனஸ் ஆர்பிட்டில் நிலை நிறுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கும்.
இதுவரை அதிக பட்சமாக 2.5 டன் எடையுள்ள செயற்கை கோள்களை இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் பூமியிலிருந்து 36,000 கிமீ உயரத்தில் ஜியோ சிங்க்ரோனஸ் ஆர்பிட்டில் நிலை நிறுத்தும் வல்லமையை பெற்றிருக்கிறது.
ஆனால், புதிய எரிபொருள் நுட்பத்துடன் தயாரிக்கப்படும் ராக்கெட் 10 டன் எடையுடைய செயற்கை கோள்களை ஜியோ சிங்ரோனஸ் எனப்படும் மத்திய தூர புவி வட்ட கோளப் பாதையில் நிலைநிறுத்தும்.
ஜியோ சிங்க்ரோனஸ் கோளப் பாதையில் அதிக எடையுடைய செயற்கை கோள்களை நிலை நிறுத்துவது மிக சவாலான விஷயமாக இருக்கிறது.
இந்த கோளப் பாதையில் நிலை நிறுத்தப்படும் செயற்கை கோள்கள் பூமிக்கு இணையான வேகத்தில் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் தானாக பயணிக்கும்.
இந்த கோளப் பாதையில் நிலை நிறுத்தும் போது, பூமிக்கு இணையான வேகத்தில் விண்வெளியில் செயற்கைகோள் சுற்றும் என்பதால், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு தேவையான தகவல்கள், கண்காணிப்பை எளிதாக மேற்கொள்ள முடிகிறது.
அதிக எடையை சுமந்து செல்லும் இந்த ராக்கெட்டிற்கு சுற்றுச் சூழலுக்கு உகந்த கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய எஞ்சின் தயாரிப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.
கிரையோஜெனிக் எஞ்சின் தயாரிப்பு பணியை கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இஸ்ரோ ராக்கெட்டுகளுக்கான விகாஸ் எஞ்சின்களை கோத்ரேஜ் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
இந்த புதிய கிரையோஜெனிக் எஞ்சின் மண்ணெண்ணெய் மறறும் திரவ ஆக்சிஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தற்போது சிஇ20 என்ற கிரையோஜெனிக் எஞ்சின் மூலமாக 4 டன் எடையுடைய செயற்கை கோள்களை சுமந்து செல்லும் திறன் படைத்தை ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டின் புரோட்டோ டைப்பை ஏற்கனவே இஸ்ரோ தயாரித்துள்ளது.
அடுத்த ஆண்டு இந்த புதிய ராக்கெட்டை தகவல் தொடர்பு செயற்கை கோள்களுடன் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்த ராக்கெட் 65 மீட்டர் நீளமும், 732.6 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் மூலமாக 10 டன் எடையுடையே செயற்கை கோள்களை குறைந்த தூர புவியின் அடி கோளப் பாதையில் நிலை நிறுத்த முடியும்.
இதைத் தொடர்ந்து, 10 டன் எடையை சுமந்து கொண்டு பறக்கும் புதிய ராக்கெட் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மிக குறைவான செலவீனத்தில் அதிக எடையுடைய செயற்கை கோள்களை சுமந்து செல்லும் இஸ்ரோவின் புதிய ராக்கெட் உலக அளவில் ராக்கெட் ஏவும் வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.
இது அமெரிக்க நிறுவனங்களுக்கு மேலும் கிலியை ஏற்படுத்தி யிருக்கிறது.