மதுவை ஒழிப்பதற்குள் மக்களின் உயிர் போய்விடும் தமிழிசை !

தமிழகத்தில் அதிமுக அரசு மதுவிலக்கை அமல் படுத்துவதற்குள் மக்களின் உயிர் போய்விடும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார். 
ஆவடியில் சட்டமன்ற வேட்பாளரை அறிமுகம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.

படிப்படியாக மதுவிலக்கை செயல்படுத்துவதற்குள் படிப்படியாக மக்களின் உயிரும் போய்விடும், தமிழகத்தில் உள்ள மக்களின் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை எனவும், 
மக்கள் குடித்துவிட்டு பாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கொள்கையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக சார்பில் தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தும் அதனை அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் தமிழிசை குற்றம்சாட்டினார்.
Tags:
Privacy and cookie settings