பி.எஃப். பணத்தை திரும்பப் பெறுவதற்கான கெடு மேலும் நீட்டிப்பு !

0 minute read
ஊழியர்கள் தங்கள் பி.எஃப். பணத்தை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி ஊழியர்கள் ஓய்வு காலம் வரை காத்திருக்காமல் தங்களது 
வருங்கால வைப்பு நிதியில் உள்ள மொத்த தொகையையும் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 1-ம் தேதியுடன் இதற்கான கெடு முடிவதாக இருந்தது.

பல்வேறு தொழிற்சங்களிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து மத்திய தொழிலாளர் நல வாரிய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா இதற்கான உத்தரவை அளித்து ஒப்புதல் வழங்கிள்ளார். 

இதற்கான அரசு அறிவிக்கை விரைவில் வெளியாகும் என தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings