இறந்த உடலை கடலுக்கடியில் வைத்தால் என்னவாகும் !

றந்த உடலை கடலுக்கடியில் வைத்தால் என்னவாகும் என அறிய ஆவலா?...இறந்த உடலங்களை சாதாரணமாக தரையில் வைக்கப்படும்போது நுண்ணுயிரிகளின்
செயற்பாடுகள் காரணமாக சதைகள் பிரிந்தழியச் செய்யப்பட்டு துர்நாற்றம் வீசும். இறுதியில் எலும்புக்கூடு எஞ்சும். இச் செயன்முறை இடம்பெறுவதற்கு சில நாட்கள் ஆகும்.

அதே போன்றே கடற்படுக்கையின்அடிப்பகுதியில் இறந்த உடலத்திற்கு என்ன நடைபெறும் என அறிய முனைந்த கனேடிய விஞ்ஞானிகள் இறந்த பன்றி ஒன்றினை கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 984 அடிகள் ஆழத்தில்வைத்துள்ளனர்.

இந்த ஆய்வு முயற்சியானது வசந்தகாலம், இலையுதிர் காலம் என இரு தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது கமெராக்கள் கொண்டு இரு தடவைகளும் 150 நாட்கள் கண்காணிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings