பிரேமலதா விடுதிக்குள் நுழைய முயன்ற அதிமுகவினரால் பரபரப்பு !

தேமுதிக கூட்டங்களில் எம்.ஜி.ஆர் குறித்தும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியும் பிரேமலதா விஜயகாந்த் அவதூறாகப் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் அவர் தங்கியிருந்த விடுதி முன்பு அதிமுகவினர் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், தடையை மீறி விடுதிக்குள் செல்ல முயன்றபோது, அதிமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து, அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவதூறு பேச்சுக்கள் பேசுவதை பிரேமலதா விஜயகாந்த், நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர், ஆர்பாட்டக்காரர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை, போலீசார் தடுக்கத் தவறி விட்டதாக தேமுதிகவினர் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே பிரேமலதா விஜயகாந்திற்கு எதிராக கறுப்புக்கொடிகாட்டிய அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதே போல் நேற்று பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக தேமுதிக எம்.எல்.ஏ மோகன்ராஜ், மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோ மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings