பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் 3வது தீவிரவாதியின் சிசிடிவி கேமிரா பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மற்றும், மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்தில்
கடந்த 22ம் தேதி அடுத்தடுத்த நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். இத்தாக்குதலில் தொடர்புடைய மூன்று தீவிரவாதிகளில் இருவர் பலியாகி விட்ட நிலையில்,
குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3வது நபர், எந்தவித பதற்றமும் இன்றி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெள்ளை நிற ஜாக்கெட் மற்றும் தொப்பி அணிந்தபடி காலை 7.58 மணிக்கு விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அந்த நபர்,
அருகிலுள்ள சவென்டர் பகுதியை அடையும் வரையிலான காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில், அவரை கண்டறிய முடியாதது பிரஸ்ஸல்ஸ் போலீசாருக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.