தேமுதிக வேட்பாளர்கள் ஏழைகள் விஜயகாந்த் !

நத்தம் விஸ்வநாதன் லஞ்சம் பெற்ற ரூ.525 கோடியில் ஜெயலலிதாவு பங்கு இல்லாமல் இருக்குமா? என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார், அதன் ஒரு பகுதியாக கடையநல்லூர் தேரடி திடலில் இன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 

அவர் பேசியதாவது: 

இந்த தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறுகின்ற போர். தர்மத்தின் பக்கம் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, மக்கள் ஆதரவுடன் உள்ளது. இந்த தேர்தல் தொடர்பாக சிலர் கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

அது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. இந்த தேர்தலில் ஜெயலலிதா ஜெயிப்பாரா என பார்ப்போம். எங்களுக்கு மக்கள் பலம் உள்ளது. விரோதிகளை மன்னிக்கலாம், துரோகிகளை மன்னிக்ககூடாது. 

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் பணக்காரர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் அவர்கள் ஏழைகள். எங்களால் என்ன செய்ய முடியும் எங்களிடம் பணம் இல்லை. 

ஆனால், விஜயகாந்த் மக்களுக்காக வாழ்ந்தார் என சரித்திரம் பேசும். தமிழகத்தை தலை நிமிரச் செய்வேன் என ஜெயலலிதா கூறுகிறார். முதலில் அவர்கள் கட்சியினரை தலை நிமிர செய்யட்டும் என கூறினார். 

மேலும், மின்சாரம் கொள்முதலில் நத்தம் விஸ்வநாதன் லஞ்சம் பெற்ற ரூ.525 கோடியில் ஜெயலலிதாவுக்கு பங்கு இல்லாமல் இருக்குமா ? என விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
Tags:
Privacy and cookie settings