மத்தியப் பிரதேசத்தில் வெங்காயம் விலை தெரியுமா? அம்மாடியோ !

1 minute read
உற்பத்தி அதிகரிப்பைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. உரிக்க உரிக்க உள்ளே எதுவும் இல்லாதது என்பதால், 
வெங்காயம் என்பதை திட்டும் வார்த்தையாகப் பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், தோலைத் தொட்டாலே கண்களை வியர்க்க வைக்கும் வெங்காயம், கடந்த சில வருடங்களுக்கு முன் மத்தியில் ஆள்பவர்களை என்ன பாடுபடுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. 

அதிரடி விலைக் குறைவு... 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை, சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

ஆனால், தற்போது அதிரடியாக இந்த விலை கிலோவிற்கு 30 பைசாவாக குறைந்துள்ளது. விவசாயிகள் கவலை... இந்த திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

இதனால் வெங்காயத்தை குப்பையில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர். வாங்க ஆள் இல்லை... வழக்கமாக நாள் ஒன்று சுமார் 5 ஆயிரம் வெங்காய மூட்டைகள் இந்த சந்தைக்கு விற்பனைக்காக வருமாம். 

ஆனால், தற்போது 4 ஆயிரம் மூட்டைகளே விற்பனைக்கு வந்துள்ளதாகவும், ஆனால் அதையும் வாங்குவதற்கு வியாபாரிகள் தயாராக இல்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
Tags:
Privacy and cookie settings